Gujarat Accident: குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. 7 பேர் உயிரிழப்பு!
குஜராத் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக பேசிய சூரத் மாவட்ட ஆட்சியிர் சௌரப் பார்தி, “ அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு இருந்த 4 முதல் 5 குடியிருப்புகள் கீழே விழுந்து தரைமட்டமானது. தற்போது வரை ஒரு பெண் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. பேரிடர் மீட்பு படைகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
குஜராத் – கட்டிடம் இடிந்து விபத்து: குஜராத் மாநிலம் சூரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளானதில் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்க்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத்தின் சச்சின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் மீட்புப் பணி தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH | Gujarat: A Four-floor building collapsed in Sachin area of Surat. Many people feared trapped. Police and fire department team at the spot. Rescue operations underway. pic.twitter.com/FIJJUGzbEQ
— ANI (@ANI) July 6, 2024
இது தொடர்பாக பேசிய சூரத் மாவட்ட ஆட்சியிர் சௌரப் பார்தி, “ அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு இருந்த 4 முதல் 5 குடியிருப்புகள் கீழே விழுந்து தரைமட்டமானது. தற்போது வரை ஒரு பெண் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. பேரிடர் மீட்பு படைகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
அந்த கட்டிடம் 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், சமீபத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியின் ஹர்ஷ் விஹார் பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தின் மொட்டை மாடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்தபோது குழந்தை மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது மொட்டை மாடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் தெரிய வந்தது. ஆனால் அந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இந்த ஆண்டு மார்ச் மாதம், மோர்பி நகரில் கட்டுமான பணிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் சுமார் 7 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: 3 குற்றவியல் சட்டங்கள் – ”நாட்டை சர்வாதிகார தன்மை நோக்கி நகர்த்தும்” – அமைச்சர் துரைமுருகன்..