5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து.. 32 பேர் உயிரிழப்பு.. குஜராத்தில் சோகம்!

Rajkot Fire Accident: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து.. 32 பேர் உயிரிழப்பு.. குஜராத்தில் சோகம்!
ராஜ்கோட் தீ விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 May 2024 09:36 AM

ராஜ்கோட் தீ விபத்து: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இங்கு உள்ள வணிக வளாகத்தில் சிறுவர்களுக்கென டிஆர்பி விளையாட்டு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தற்காலிக கூடராம் ஒன்றில் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால், அப்பகுதியில்  பரபரப்பான சூழல் நிலவியது. இந்த விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காயம் அடைந்தவர்களை மீட்பு ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 4 மணிக்கு தான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், மீட்பு பணிகள் அங்கு முழுவீச்சில் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த விளையாட்டு மையத்திற்கு குழந்தைகள் பலரும் வருகை தந்துள்ளனர். எனவே மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

32 பேர் உயிரிழப்பு:

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜ்கோட் விளையாட்டு மண்டல மேலாளர் நிதின் ஜெயின் மற்றும் கேமிங் பங்குதாரர் யுவராஜ் சிங் சோலங்கி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகள் விளையாட்டு மையங்களையும் ஆய்வு செய்ய குஜராத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் அனைத்து விளையாட்டு மையங்களையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்:

இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி, “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகவும் வேதடை அடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது” என்றார். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

Also Read: ”உங்க கருத்து தேவையில்ல” ஆதரவளித்த பாக். முன்னாள் அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி!

Latest News