Vikas Yadav: குர்பந்த் சிங் பன்னுனை கொல்ல முயற்சி.. விகாஸ் யாதவ் டெல்லியில் கைது! - Tamil News | Gurpatwant Singh Pannun murder bid, Delhi Police arrested Vikash Yadav | TV9 Tamil

Vikas Yadav: குர்பந்த் சிங் பன்னுனை கொல்ல முயற்சி.. விகாஸ் யாதவ் டெல்லியில் கைது!

சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்சிங் பன்னு இந்திய அரசால் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவின் நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இவரை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்கா நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikas Yadav: குர்பந்த் சிங் பன்னுனை கொல்ல முயற்சி.. விகாஸ் யாதவ் டெல்லியில் கைது!

கோப்பு புகைப்படம்

Published: 

19 Oct 2024 09:43 AM

விகாஸ் யாதவ் கைது: அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பந்த் சிங் பன்னுவை கொலை செய்ய முயன்ற வழக்கில் அமெரிக்க புலனாய்வு விசாரணை அமைப்பால் தேடப்பட்டு வந்த முன்னாள் இந்திய அதிகாரி விகாஸ் யாதவ் டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அமெரிக்கா நீதிமன்றம் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தது. முன்னாள் ரா அதிகாரி மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விகாஸ் யாதவ் மீது கூலிக்கு கொலை செய்தல், பணம் மோசடி போன்ற குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்சிங் பன்னு இந்திய அரசால் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவின் நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இவரை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்கா நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை குற்றவாளியான நிகில் குப்தா கடந்தாண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இவர்கள் இருவரும் இணைந்து குர்பந்த் சிங் பன்னுவை கொலை செய்ய ஒருவருக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Also Read: Fluorescent Waves: ECR கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்.. என்ன காரணம் தெரியுமா?

கடந்தாண்டு சீக்கிய பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் எழுந்தது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதற்கும், குர்பந்த் சிங் பன்னு கொல்ல முயற்சி செய்ததற்கும் தங்கள் நாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் தான் முன்னாள் இந்திய அதிகாரி விகாஸ் யாதவ் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தது.

அவர் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் போர்க்கலை மற்றும் ஆயுதங்களை கையாளுதல் ஆகியவற்றிலும் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். கொலை முயற்சி வழக்கில் அவர் பெயர் இணைசதிகாரர் என சேர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே விகாஸ் யாதவ் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர் வெளியிடப்பட்டு Wanted என அச்சடிக்கப்பட்டிருந்தது.

Also Read: தமிழ் எங்கள் மூச்சு.. ஆனால் உங்க வரலாறு?.. ஆளுநரை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் வாழும் மக்களை பழிவாங்க முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. அமெரிக்காவில் வசிப்பவர்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது முக்கியமான விஷயம். குர்பந்த் சிங் பன்னுவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இதில் விகாஸ் யாதவ் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலும்,  வெளிநாட்டிலும் அவருக்கு கூலிப்படை முகவர்களுடன் தொடர்புள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. விகாஸ் யாதவ் நிகில் குப்தா என்ற நபரை குர்பந்த் சிங் பன்னுவை கொல்வதற்காக வேலைக்கு அமர்த்தியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் நிகில் குப்தா கைது செய்யப்பட்டவுடன் நடைபெற்ற விசாரணை தொடர்பான அறிக்கை அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை அதிகாரியான விகாஸ் யாதவ் மீது அமெரிக்கா அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவர் தற்போது இந்திய அரசு பணியில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு  தொடர்பாக அமெரிக்க பகிர்ந்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட விசாரணையை மத்திய அரசு அதிகாரிகள் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியதற்கான ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா – கனடா இடையேயான உறவுகளில் ஏற்பட்ட கடுமையான சேதத்துக்கு ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியா – கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல்கள் ஏற்பட்டு தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?