Zomato: சொமேட்டோ சிஇஓவுக்கு நேர்ந்த கதி.. அலர்ட்டான நிர்வாகம்.. ஊழியர்கள் ஹேப்பி!
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு பல இடங்களில் அனுமதியும் மரியாதையும் மறுக்கப்படுவதை பற்றி தெரிவித்திருந்தார். அதாவது ஹல்திராம் என்பவரின் ஆர்டரை பெறுவதற்காக குர்கானில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்கு நானும், என் மனைவியும் சென்றோம். ஆனால் அங்கிருந்த நுழைவு வாயில் அதிகாரி எங்களை மற்றொரு தடுத்து வேறொரு நுழைவாயில் வழியாக வரும்படி அழைத்தார். அப்போதுதான் எங்களை போகச் சொன்ன வழியில் லிப்ட் எதுவும் இல்லை. படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டி இருந்தது.
zomato சம்பவம்: பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான zomatoவின் சிஇஓ தீபிந்தர் கோயல் ஊழியராக மாறி உணவு டெலிவரி செய்தது வைரலான நிலையில், இந்த நிகழ்வின்போது போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்று பேசுபொருளாக மாறியுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் வளர்ச்சிஆண்டுக்கு ஆண்டு அசுர பலம் பெற்று வருகிறது என்பதை உண்மை. இருந்த இடத்தில் இருந்தே நாம் சாப்பிட விருப்பப்படும் உணவுகளை வீட்டுக்கே வரவழைக்கும் இந்த திட்டம் நகரம் முதல் கிராமம் வரை பரவி விட்டது. மேலும் வேலை வாய்ப்பில்லாதவர்களும் தங்கள் அன்றாட வருமானத்தை பெற உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் இதில் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
இதனிடைய சொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், அதன் தலைமைச் செயல் அதிகாரியமான தீபிந்தர் கோயல் தனது மனைவி ஜியா கோயலுடன் இணைந்து உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அவர் ஜொமேட்டோ நிறுவனத்தின் ஆடையை அணிந்தபடி பைக்கில் சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்கினார். இதுசம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜியா கோயல் பகிர்ந்திருந்த நிலையில் அது இணையத்தில் வைரலானது. மேலும் அதில் தீபிந்தர் கோயல் உணவு டெலிவரி செய்த அனுபவம் குறித்தும் விளக்கம் அளித்து இருந்தார்.
அதில், “சில நாட்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டோம்” என தெரிவித்திருந்தார். ஒரு பெரிய நிறுவனத்தின் சிஇஓ இவ்வாறு செயல்படுவது அதன் ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உணவு டெலிவரி சேவையில் இருக்கும் கஷ்டங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியும் போது நிச்சயம் மாற்றம் ஏற்படும் ஊழியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
Also Read: Bigg Boss Tamil Season 8: கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாச்சனா – வெளியானது வீடியோ
இப்படியான நிலையில் தீபிந்தர் கோயல் தனது பதிவில், “உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு பல இடங்களில் அனுமதியும் மரியாதையும் மறுக்கப்படுவதை பற்றி தெரிவித்திருந்தார். அதாவது ஹல்திராம் என்பவரின் ஆர்டரை பெறுவதற்காக குர்கானில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்கு நானும், என் மனைவியும் சென்றோம். ஆனால் அங்கிருந்த நுழைவு வாயில் அதிகாரி எங்களை மற்றொரு தடுத்து வேறொரு நுழைவாயில் வழியாக வரும்படி அழைத்தார். அப்போதுதான் எங்களை போகச் சொன்ன வழியில் லிப்ட் எதுவும் இல்லை. படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டி இருந்தது.
சரி என நாங்களும் ஆர்டரை பெற மூன்றாவது மாடிக்கு படிக்கட்டுகள் வழியாக சென்றோம். அங்கே எங்களுக்கு முன்னதாக எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த சில டெலிவரி ஊழியர்களும் காத்திருந்தனர். அவர்களிடம் காத்திருப்பது பற்றி விசாரணை செய்கையில் தான் மாலுக்குள் எங்களால் நுழைய முடியாது என்றும், ஆர்டர்களை பெற படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இது பற்றி எனது சக ஊழியர்களிடம் நான் கலந்துரையாடினேன். சிறிது நேரத்திற்கு பின் எனது டெலிவரி உணவை வாங்கிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன்.
இதனைத் தொடர்ந்து அனைத்து டெலிவரி பார்ட்னர்களின் வேலையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உணர்ந்து கொண்டேன். குறிப்பாக மால்களுடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மேலும் மால்களில் இருக்கும் ஊழியர்களும் உணவு டெலிவரி ஊழியர்களுடன் மனிதாபித்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது பற்றி உங்கள் கருத்து எனவும் தீபிந்தர் கோயல் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில் தீபிந்தர் கோயலின் பதிவுக்கு பதிலளித்துள்ள ஆம்பியன்ஸ் மால் நிர்வாகம், “ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் தங்களது உணவுகளை பிக்கப் செய்வதற்கு வசதியாக பிக்கப் பாய்ண்ட் ஒன்று அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் காத்திருப்பது குறைக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக தனது கோரிக்கைக்கு பதிலளித்த ஆம்பியன்ஸ் மால் நிர்வாகத்திற்கு தீபிந்தர் கோயல் நன்றி தெரிவித்துள்ளார்