Happy Independence Day 2024: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தேசியக் கொடி வைக்கனுமா? இந்த போட்டோவை ட்ரை பண்ணுங்க! - Tamil News | Happy Independence Day 2024 best images of tiranga flag to keep as whatsapp status amd wallpaper | TV9 Tamil

Happy Independence Day 2024: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தேசியக் கொடி வைக்கனுமா? இந்த போட்டோவை ட்ரை பண்ணுங்க!

Updated On: 

15 Aug 2024 08:56 AM

சுதந்திர தின வாழ்த்துக்கள்: 78வது இந்திய சுதந்தர தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி பலரும் தேசியக் கொடியை தங்கள் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலங்களில் ஏற்றுவார்கள். தேசிய கொடியில் மூன்று நிறங்கள் உள்ளன. அதில் முதலில் உள்ள ஆரஞ்சு நிறம் நாட்டின் வலிமை மற்றும் தையரியத்தை குறிக்கிறது. மையத்தில் உள்ள வெள்ளை அனுமதி மற்றும் உண்மையை உள்ளடக்கியது. கீழே உள்ள பச்சை நிறம் நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் மங்களம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

1 / 6இந்தியாவின்

இந்தியாவின் 78வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு எண்ணற்ற முகம் தெரியாத மக்கள் தொடங்கி முன்னணி தலைவர்கள் வரை உயிர் நீத்துள்ளனர். 16 வயது குதிராம் போஸ் துவங்கி 78 வயதில் இறந்த காந்தி வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவு கூறப்பட வேண்டியவர்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான்.

2 / 6

இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்தியாவின் முதல் பிரதமர் ஐவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடி ஏற்றுவது வழக்கம். அந்த பழக்கம் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. நாளை 78வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுவார்.

3 / 6

இந்திய சுதந்தர தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி பலரும் தேசியக் கொடியை தங்கள் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலங்களில் ஏற்றுவார்கள். தேசிய கொடியில் மூன்று நிறங்கள் உள்ளன. அதில் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது நாட்டின் வலிமை மற்றும் தையரியத்தை குறிக்கிறது. மையத்தில் உள்ள வெள்ளை அனுமதி மற்றும் உண்மையை உள்ளடக்கியது. கீழே உள்ள பச்சை நிறம் நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் மங்களம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

4 / 6

1904ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் தேசியக் கொடியை சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா வடிவமைத்தார். இன்று நாம் பயன்படுத்தும தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா. ரவீந்திரநாத் தாகூர 1911ல் பரோதோ பாக்யோ பிதாதா பாடலை இயற்றினார். பின், அது ’ஜன கன மன' என மறுபெயரிடப்பட்டது.

5 / 6

இந்தியாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தேசியக் கொடி தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கர்நாடகாவில் உள்ள பெங்கிரி கிராமத்தில் தான் இந்திய தேசியக் கொடி தயாரிக்கப்படுவதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையில், நாளை 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

6 / 6

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் கொடியேற்றுவார்கள்.தேசியக் கொடியை ஏற்றும்போது ​​சின்னத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மரியாதை மற்றும் கண்ணியத்துடன் செய்ய வேண்டும். தேஇசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் வணக்கம் செலுத்த வேண்டும். தேசியக் கொடி எப்பொழுதும் முக்கிய இடத்தில் ஏற்றப்பட வேண்டும். கொடியை ஏற்றுபவர்கள் மரியாதைக்குரிய உடையை அணிந்திருக்க வேண்டும், மேலும் சுதந்திர தினத்தன்று தங்களது வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!