பேருந்து தீ பிடித்து விபத்து.. 10 பேர் உயிரிழந்த சோகம்.. ஹரியானாவில் அதிர்ச்சி!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவின் நூஹ் அருகே குண்டலி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா பிருந்தாவனுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுவிட்டு 60க்கும் மேற்பட்டோர் பஞ்சாப் திரும்பிக் கொண்டிருந்தனர். பல்வால் விரைவுச் சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்து தீ பிடித்து விபத்து.. 10 பேர் உயிரிழந்த சோகம்.. ஹரியானாவில் அதிர்ச்சி!

ஹரியானா பேருந்து விபத்து

Updated On: 

18 May 2024 09:32 AM

பேருந்து எரிந்து விபத்து: ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவின் நூஹ் அருகே குண்டலி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா பிருந்தாவனுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுவிட்டு 60க்கும் மேற்பட்டோர் பஞ்சாப் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்தில் சுமார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். பல்வால் விரைவுச் சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Also Read : சடலத்துடன் செல்ஃபி.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்.. பின்னணி என்ன?

இந்த விபத்து குறித்து அறிந்து போலீசாரும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

10 பேர் உயிரிழப்பு:

இந்த விபத்து குறித்து உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான மீனா ராணி கூறுகையில், “இந்த விபத்து மிகவும் வேதனையாக உள்ளது. பிருந்தாவனத்திலிருந்து பக்தர்கள் குஜராத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு பேருந்தின் புகை நாற்றம் வீசியது தெரிந்தது. மோட்டார் சைக்கிள் எங்கள் பேருந்தால் வந்த ஒருவர் பேருந்தின் பின்புறம் தீப்பற்றி எரிவதைக் கூறினார். பேருந்து உடனே நிறுத்தப்பட்டது. அனைவரும் இறங்குவதற்குள் பேருந்தில் மளமளவென தீ பரவியது. இதில், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் காயமடைந்தனர்.


விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், “பேருந்து தீப்பிடித்ததைப் பார்த்தம் நாங்கள் அனைவரும் ஓடிச் சென்று வண்டியை நிறுத்தை அனைவரையும் வெளியேற்ற முயன்றோம். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் 3 மணி நேரம் கழித்து தான் சம்பவ இடத்திற்கு வந்தனர்” என்று தெரிவித்தனர்.

Also Read : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. 49 தொகுதிகளில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!