5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Haryana Election Result: நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி – ஹரியானா மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..

அதேபோல், காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்கிறது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் அபார வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலும், பாஜக பெரும்பான்மை இடங்கள் பிடித்துள்ளது.

Haryana Election Result: நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி – ஹரியானா மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..
பிரதமர் மோடி
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 08 Oct 2024 19:54 PM

ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. 90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் பாஜக 89 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். ஜனநாயக ஜனதாக கட்சி 66 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி 12 இடங்களிலும் போட்டியிட்டனர். மேலும், ஆம் ஆத்மி 88 இடங்களிலும் போட்டியிட்டனர். 90 தொகுதிகளில் 464 சுயேச்சைகள் மற்றும் 101 பெண்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 46 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அதேபோல், காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்கிறது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் அபார வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலும், பாஜக பெரும்பான்மை இடங்கள் பிடித்துள்ளது.


இது தொடர்பாக பிரதமர் மோடி ஹரியானா மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், “ மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மை வழங்கிய ஹரியானா மக்களுக்கு எனது நன்றிகள். இது அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகும். இங்குள்ள மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற எந்தக் வாய்ப்பையும் நழுவ விடமாட்டோம் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றிக்காக அயராது, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த எனது கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் மாநில மக்களுக்கு முழுமையாக சேவை செய்தது மட்டுமின்றி, எங்கள் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலையும் அவர்களிடம் கொண்டு சென்றிருக்கிறீர்கள். இதன் விளைவாக ஹரியானாவில் பாஜக இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ”ஹரியானாவின் வெற்றி எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது” – எம்.பி ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு..

இது ஒரு பக்கம் இருக்க, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பலத்தைப் பெற்றுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக ஆகியவை தனித்தும் போட்டியிட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க 45 தொகுதிகள் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டணி 49 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.


ஹரியானாவில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. பாஜக 29 இடங்கள் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பகுதியில், “ ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் செயல்பாடு குறித்து நான் பெருமைப்படுகிறேன். எங்கள் கட்சிக்கு வாக்களித்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது காரியகர்த்தாக்களின் கடின முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Latest News