Haryana Election Results: ஹாட்ரிக் பதித்த பாஜக.. மீண்டும் ஹரியானாவில் வெற்றி வாகை சூடிய ஆளும் கட்சி.. - Tamil News | haryana election results 2024 haryana votes to be counted today bjp congress tamil news | TV9 Tamil

Haryana Election Results: ஹாட்ரிக் பதித்த பாஜக.. மீண்டும் ஹரியானாவில் வெற்றி வாகை சூடிய ஆளும் கட்சி..

ஹரியானா தேர்தல் முடிவுகள்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சுமார் 2 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் இன்று  காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

Haryana Election Results: ஹாட்ரிக் பதித்த பாஜக.. மீண்டும் ஹரியானாவில் வெற்றி வாகை சூடிய ஆளும் கட்சி..

ஹரியானா தேர்தல் முடிவுகள்

Updated On: 

08 Oct 2024 23:36 PM

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சுமார் 2 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் இன்று  காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 93 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேற்பார்வையில் தபால் வாக்கு எண்ணப்பட்டது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. மின்னணு வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டிருந்தாலும், காங்கிரஸ் பின்னடைவு சந்தித்துள்ளது.

ஹரியானாவில் யார் ஆட்சி?

இதில் பாஜக 89 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். ஜனநாயக ஜனதாக கட்சி 66 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி 12 இடங்களிலும் போட்டியிட்டனர். மேலும், ஆம் ஆத்மி 88 இடங்களிலும் போட்டியிட்டனர்.

Also Read: அப்படிப்போடு.. நவராத்திரி பண்டிகைக்கு பாடல் எழுதிய பிரதமர் மோடி!

90 தொகுதிகளில் 464 சுயேச்சைகள் மற்றும் 101 பெண்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், லட்வா தொகுதியில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிட்டார். மேலும், கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, எல்லெனாபாத் தொகுதியில் ஐஎன்எல்டியின் அபய் சௌதாலா, உச்சான கலன் தொகுதியில் ஜேஜேபியின் துஷ்யந்த் சௌதாலா, ஆம்பலா கான்ட் தொகுதியில் பாஜகவின் அனில் விஜ் ஆகியோர் களத்தில் உள்ளவர்களில் முக்கியமானவர்கள்.

மேலும், நார்னாண்ட் தொகுதியில் கேப்டன் அபிமன்யு , பட்லி தொகுதியில் ஓபி தங்கர், கலாயத் தொகுதியில் ஆம் ஆத்மியின் அனுராக் தண்டா மற்றும் ஜூலானா தொகுதியில் காங்கிரஸின் வினேஷ் போகட் ஆகியோர் போட்டியிட்டனர்.

2019 தேர்தல் முடிவுகள்:

ஹரியானாவில் கடந்த 10ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் வாக்கு கணிப்புகள் கூறியுள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

Also Read: சொமேட்டோ சிஇஓவுக்கு நேர்ந்த கதி.. அலர்ட்டான நிர்வாகம்.. ஊழியர்கள் ஹேப்பி!

கடந்த 2019 ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40, காங்கிரஸ் 31, ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. பாஜக ஜனநாக ஜனதா கட்சி கூட்டணி, சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கு முன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக படுதோல்வி அடையும் எனவும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!