அம்மாடியோவ்.. ஒரு எருமை மாடு விலை ரூ.23 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல்?
Haryana Buffalo : ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பல்மிந்த்ரா கில். இவர் அன்மோல் என்ற எருமை மாட்டை வளர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த இந்திய விவசாயிகளின் கண்காட்சியில் அன்மோல் கலந்து கொண்டது. அப்போதில் இருந்து அன்மோல் என்ற எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய உணவுகளில் மாட்டுப் பால் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. காலையில் டீ, காஃபியில் தொடங்கி இரவு வரை பாலை பயன்படுத்தி வருகிறோம். அதிலும் பசு மாட்டு பாலைவிட எருமை மாட்டுப் பாலை சிலர் விரும்புவார்கள். ஏனென்றால் எருமை மாட்டு பாலில் தான் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால் இனிப்புகள் செய்ய எருமைப் மாட்டு பாலை பயன்படுத்துவார்கள். மேலும், பசு மாட்டை ஒப்பிடும்போது எருமை மாட்டை வளர்க்க செலவுகள் குறைவு என்று கூறப்படுகிறது. ஆனால், நம் ஊரில் ஒருவர் எருமை மாட்டை வளர்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகிறார். இது வேறு எங்கேயும் இல்லை. ஹரியானாவில் தான்.
ஒரு எருமை மாடு விலை ரூ.23 கோடியா?
1,500 கிலோ எடை கொண்டு எருமை மாடு தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பல்மிந்த்ரா கில். இவர் அன்மோல் என்ற எருமை மாட்டை வளர்த்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த இந்திய விவசாயிகளின் கண்காட்சியில் அன்மோல் கலந்து கொண்டது. அப்போதில் இருந்து அன்மோல் என்ற எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, அன்மோலின் எடை 1,500 கிலோ இருப்பதாக கூறப்படுகிறது.
அன்மோலின் ஆரோக்கியத்தையும் வலிமையையும் பராமரிக்க பிரத்யேக உணவுகளை கில் வழங்கி வருகிறார். அன்மோலின் உணவுக்காக மட்டும் தினமும் ரூ.1500 செலவு செய்கிறார். அதாவது, 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழங்கள், 4 கிலோ மாதுளை, 5 கிலோ பால் மற்றும் 20 முட்டைகளை தினமும் அன்மோல் என்ற எருமை மாட்டிற்கு உணவகாக கொடுத்து வருகிறார்.
Also Read : கொடூர விபத்து.. 100 கி.மீ வேகத்தில் லாரி மீது பாய்ந்த கார்.. உடல் சிதறி 6 மாணவர்கள் உயிரிழப்பு!
என்ன ஸ்பெஷல்?
மேலும், உடல் எடையை அதிகரிக்க ஆயில் கேக், நெய், சோயா பீன்ஸ், சோளம் போன்றவற்றைவும் கொடுக்கப்படுகிறது. உணவுகளை தவிர, தினமும் இரண்டு முறை குளிக்க வைக்கப்படுகிறது. மேலும், மசாஜ் செய்யப்படுகிறது. அன்மோலின் விந்தணு அவரது உரிமையாளருக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
அன்மோலின் விந்தணு வாரத்திற்கு இரண்டு முறை எடுக்கப்படுகிறது. ஒருமுறை எடுக்கப்படும் விந்தணுவை வைத்து 300 முதல் 900 எருமைகளைக் கருத்தரிக்க செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு எருமைக்கும் ரூ.300 வரை கட்டணமாக வாங்குகிறார் கில். இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ.4 முதல் ரூ.5 லட்சம் லாபம் எடுக்கிறார்.
அன்மோலின் வாரிசுகள் தினமும் குறைந்தது 20 லிட்டர் பாலை கறக்கு திறன் கொண்டது. அதிகபட்சமகா அன்மோலின் தாய் தினசரி 25 லிட்டர் பாலை கறந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் மூலமும் கில் வருமானத்தை ஈட்டி வருகிறார். இது எருமையைப் பராமரிப்பதற்கான குறிப்பிடத்தக்க செலவுகளை நிர்வகிக்க உதவுகிறது.
Also Read : பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. பதறிய அதிகாரிகள்.. என்னாச்சு?
அன்மோலை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்தால் அதன் மதிப்பு ரூ.23 கோடியாம். ஆனால், கில் அதனை குடும்ப உறுப்பினர் போல் இருப்பதால், தற்போது விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து பர்மிந்தர் கில் கூறுகையில், “எருமை மாட்டை வாங்குவதற்காக நாட்டு விவசாயிகள் பலர் தன்னை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த விவசாயிகள் கூட இதை வாங்க முன்வந்துள்ளனர். இதன் விலை ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த எருமையை விற்க நான் தயாராக இல்லை. இந்த எருமையின் பராமரிப்புக்காக தான் அதிகம் செலவிடுகிறேன். அன்மோல் எருமை ஏற்கனவே பல கண்காட்சிகளில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது” என்று கூறினார்.