5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hathras stampede : ஹத்ராஸ் கூட்ட நெரிசல் கொடூரம்.. விபத்து நடந்தது எப்படி?

உத்திர பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தால் அனுமதி வாழங்கப்பட்ட பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்து நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Hathras stampede : ஹத்ராஸ் கூட்ட நெரிசல் கொடூரம்.. விபத்து நடந்தது எப்படி?
ஹத்ராஸ் விபத்து
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 02 Jul 2024 18:50 PM

ஹத்ராஸ் சம்பவம்: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் சிவ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர். தரிசனம் முடிந்த பின், அனைவரும் விழா நடைபெற்ற இடத்தில் இருந்து கலைந்து செல்ல முற்பட்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வர முயற்சி செய்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். ஆன்மிக நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.


தனியார் நிறுவனத்தால் அனுமதி வாழங்கப்பட்ட பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்து நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சமபவம் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மயாவதி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read: இனி வாட்ஸ்அப்பிலும் AI.. மெட்டாவின் அதிரடி அறிவிப்பு.. சிறப்பு அம்சங்கள் என்ன?