Ramoji Rao Death: முன்னணி ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் காலமானார்! - Tamil News | | TV9 Tamil

Ramoji Rao Death: முன்னணி ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் காலமானார்!

Updated On: 

08 Jun 2024 11:31 AM

நாட்டின் முன்னணி ஊடகத் தொழிலதிபர்களில் ஒருவரான ராமோஜி ராவ் (87) ஹைதராபாதில் இன்று காலமானார். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் முன்னணி ஊடக நிறுவனமான etv குழுமத்தின் நிறுவனரான செருகுரி ராமோஜி ராவ் இன்று அதிகாலை 4:50 மணிக்கு காலமானதாக ஈடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் இறப்புக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காபந்து பிரதமர் மோடி, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Ramoji Rao Death: முன்னணி ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் காலமானார்!

ராமோஜி ராவ்

Follow Us On

ராமோஜி ராவ் காலமானார்: நாட்டின் முன்னணி ஊடகத் தொழிலதிபர்களில் ஒருவரான ராமோஜி ராவ் (87) ஹைதராபாதில் இன்று காலமானார். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் முன்னணி ஊடக நிறுவனமான etv குழுமத்தின் நிறுவனரான செருகுரி ராமோஜி ராவ் இன்று அதிகாலை 4:50 மணிக்கு காலமானதாக ஈடிவி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பிலிம் சிட்டியாக உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி இவருக்கு சொந்தமானது. இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ம விபூஷன் வழங்கியது. மரணமடைந்ததை அடுத்து ராமோஜி ராவின் உடல் ஃபிலிம் சிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கடந்த 1936 ஆம் ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி பிறந்தார் ராமோஜி ராவ். கடந்த 1974 ஆம் ஆண்டு, ஈநாடு என்ற பெயரில் தினசரி தெலுங்கு நாளிதழை தொடங்கினார். இதைத் தவிர 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இவரின் இறப்புக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காபந்து பிரதமர் மோடி, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கல்:

ராமோஜி ராவ் காலமானதை அடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி கூறுகையில், “ஸ்ரீ ராராமோஜி ராவ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். அவருடன் பழகுவதற்கு அவருடைய ஞானத்தால் பலனடைவதற்கும் பல வாய்ப்புகளை பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்” என்று பதிவிட்டிருந்தார்.


“ராமோஜி குழுமத்தின் தொலைநோக்கு நிறுவனரான பத்ம விபூஷன் ராமோஜி ராவ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஊடகம், பத்திரிகை, திரைப்படத் துறைக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளன. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version