திருமணமான பெண்கள் பெயரை மாற்ற கணவனின் அனுமதி வேண்டுமா? மத்திய அரசின் புதிய விதி இதுதான்!
திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் குடும்ப பெயரையோ அல்லது அவர்கள் திருமணத்திற்கு முன்பு இருந்த பெயரை வைக்க வேண்டும் என்றால் கணவரிடம் இருந்து தடையில்லா சான்று (NO Objection Certificate) பெறுவது கட்டயாம் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. சட்ட ரீதியான பிரச்னைகளை தடுக்கவும், பெயர் மாற்றத்தின் அறிவிப்புகளில் நேர்மையை உறுதிப்படுத்துவற்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருமணமான பெண்கள் பெயர் மாற்ற புதிய விதி: திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் குடும்ப பெயரையோ அல்லது அவர்கள் திருமணத்திற்கு முன்பு இருந்த பெயரை வைக்க வேண்டும் என்றால் கணவரிடம் இருந்து தடையில்லா சான்று (NO Objection Certificate) பெறுவது கட்டயாம் என்று மத்திய அரசு நேற்று உறுதி செய்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரையோ அல்லது குடும்பத்தின் பெயரையோ தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பாலான சமூகங்களில் தங்கள் பெற்றோரின் குடும்ப பெயருக்கு பதிலாக கணவரின் குடும்ப பெயர்களை பெண்கள் மாற்றிக் கொள்கின்றனர். இது திருமணமான பெண்களுக்கு எழுதப்படாத ஒரு விதியாகும். திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் குடும்ப பெயர்களை மாற்ற வேண்டும் என்று சட்டம் இல்லை. எனினும் சமூக, சாதி அடிப்படையில் இது கடைபிடிக்கப்படுகிறது.
Also Read: இளநிலை மருத்துவ கலந்தாய்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?
இந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் குடும்ப பெயரையோ அல்லது அவர்கள் திருமணத்திற்கு முன்பு இருந்த பெயரை வைக்க வேண்டும் என்றால் கணவரிடம் இருந்து தடையில்லா சான்று (NO Objection Certificate) பெறுவது கட்டயாம் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டோகன் சாஹு கூறுகையில், “அரசிதழில் பெயர் மாற்றத்தை அறிவிப்பதற்கு முன் கணவருக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளதா என்பதை தெளிப்படுத்தவும், சட்ட ரீதியான பிரச்னைகளை தடுக்கவும், பெயர் மாற்றத்தின் அறிவிப்புகளில் நேர்மையை உறுதிப்படுத்துவற்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்றார்.
கண்டனம்:
இதற்கு மாநிலங்களவை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சாகேத் கோக்லே கூறுகையில், “இது மோடி அமைச்சகத்தின் பெண்கள் மீதான வெறுப்பு செயல். பெண்கள் தங்கள் இயற்பெயருக்குத் திரும்ப விரும்பினால் என்ஓசி அல்லது கணவரிடமிருந்து அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கும் விதி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நான் நாடாளுமன்றத்தில் கேட்டேன்.
Also Read: நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு.. 150-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை.. தற்போதைய நிலை என்ன?
ஆட்சேபனைகள் அல்லது சட்டரீதியான விளைவுகளை தெரிந்து கொள்ளவும், கணவருக்கு தெரிவிக்கும் நோக்கத்திற்காக கட்டாயமாக்கியதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த விளக்கம் அர்த்தமற்றதாக உள்ளது. கெசட்டில் பெயர் மாற்றம் அறிவிக்கப்படும் போது அது தானாகவே மனைவிக்கு அறிவிக்கப்படும். ஒரு பெண் தன் பெயரை மாற்றிக் கொள்ள கணவனின் அனுமதி ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு தெளிவான பதில் இல்லை” என்றார்.
நீதிமன்றத்தில் வழக்கு:
திருமணமான பெண்கள் தங்கள் குடும்பப்பெயரை பெயரை மாற்றுவதற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 40 வயது பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.