Kerala : திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் காரில் வைத்து மனைவியை எரித்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
Extra Marital Affair | அனிலா என்ற பெண்ணும், பத்மராஜ் என்பவரும் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த குடும்ப பிரச்சினைகளுக்கு நடுவே அனிலா ஒரு பேக்கரியை தொடங்கியுள்ளார். ஆனால் அந்த பேக்கரியை தொடங்கியதற்கும் பத்மராஜ் அனிலாவிடம் சண்டை போட்டுள்ளார்.
கேரளாவில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியையும் அவரது ஆண் நண்பரையும் காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், அந்தப் பெண், உயிரிழந்த நிலையில், அவரது ஆண் நண்பர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனே தனது மனைவியை ஆண் நண்பருடன் பெட்ரோல் உற்றி எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில், இந்த கொடூரம் சம்பவம் குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Rahul Gandhi : உ.பி.யின் சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா.. தடுத்து நிறுத்திய போலீஸ்!
கொலையில் முடிந்த கணவன் – மனைவி தகராறு
அனிலா என்ற பெண்ணும், பத்மராஜ் என்பவரும் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த குடும்ப பிரச்சினைகளுக்கு நடுவே அனிலா ஒரு பேக்கரியை தொடங்கியுள்ளார். ஆனால் அந்த பேக்கரியை தொடங்கியதற்கும் பத்மராஜ் அனிலாவிடம் சண்டை போட்டுள்ளார். அனிலா, சோனி என்ற நபருடன் இணைந்து இந்த பேக்கரியை தொடங்கியுள்ளார். ஆனால், இந்த உறவு பதமராஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பத்மராஜ், அனிலாவிடம் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமன்றி, ஆண் நண்பருடன் இணைந்து திறந்த அந்த பேக்கரியை மூட வேண்டும் என்றும் அனிலாவிடம் அவர் தகராறு செய்துள்ளார். ஆனால், அனிலா அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனது வேலையை பார்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மராஜ், அனிலாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Tiruchendur | திருச்செந்தூரில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள்.. அதில் இருக்கும் தகவல்கள் கூறுவது என்ன?
மனைவி மற்றும் அவரது நண்பரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன்
அனிலாவுக்கும் அவரது ஆண் நண்பருக்கும் இடையே உள்ள உறவை பலமுறை துண்டிக்க கூறியும் அனிலா அதை கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பத்மராஜ் அனிலாவை கொலை செய்துள்ளார். அதாவது கேரள மாநிலம் செம்மண்முக்கில் அனிலா தனது ஆண் நண்பர் சோனியுடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு மினி வேனில் வந்த பத்மராஜ் காரை நிறுத்தி தகராறு செய்துள்ளார். அப்போது தனது மினி வேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அனிலா வந்த காரின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ மெதுவாக பத்மராஜன் வேனுக்கு பரவ, அவர் வேனில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அனிலாவையும் அவரது ஆண் நண்பரையும் காரில் வைத்து கொளுத்திய நிலையில், அனிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது ஆண் நண்பர் 90 சதவீத தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?
வழக்குப்பதிவு செய்தி விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
இரண்டு வாகனங்களும் மிகக் கடுமையாக தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதற்குப் பிறகு காரில் இருந்து மீட்கப்பட்ட அனிலாவின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சோனியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அனிலாவின் கணவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.