5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன்.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!

பூரி சாப்பிட்ட 6ஆம் வகுப்பு மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று பூரிகளுக்கு மேல் சாப்பிட முயன்றால் சிறுவன் மூச்சி திணறி உயிரிழந்துள்ளார்.

ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன்.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Nov 2024 18:28 PM

பூரி சாப்பிட்ட 6ஆம் வகுப்பு மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று பூரிகளுக்கு மேல் சாப்பிட முயன்றால் சிறுவன் மூச்சி திணறி உயிரிழந்துள்ளார். தற்போதைய காலத்தில் ஆரோக்கியமான உணவு என்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது உயிரிழப்புகள் வரை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, அதிக எண்ணெய் உணவுகள், பிட்சா, பர்கர், பானிபூரி, ஷவர்மா போன்ற உணவுகளை சாப்பிட்டு பலரும் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் இதுபோன்றவைகளை சாப்பிட்டு உயிரிழந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன்

இந்த நிலையில் தற்போது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது,  பூரி சாப்பிட்ட 6ஆம் வகுப்பு மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  நேற்று, ஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு நேரத்தின்போது, 6ம் வகுப்பு மாணவன் பூரி சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அவர் மூன்று பூரிகளுக்கு மேல் சாப்பிட்டு கொண்டிருந்ததாக தெரிகிறது. மூன்று பூரியை சாப்பிட்ட அந்த மாணவன், நான்காவது பூரி சாப்பிடும்போது மூச்சு திணறி மயக்கம் அடைந்திருக்கிறார். இதனை பார்த்த ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினார். இதற்கு காரணமாக, ஒரே நேரத்தில் மூன்று பூரிகளுக்கு மேல் சாப்பிட்டதால் மூச்சு திணறியுள்ளது. இதனால் சிறுவன் உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Also Read : ஷிண்டே ராஜினாமா.. மகாராஷ்ராவின் அடுத்த முதல்வராகும் பட்னாவிஸ்?

மூச்சு திணறி  பரிதாபமாக உயிரிழப்பு

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “சிறுவன் மதிய உணவிற்கு வீட்டில் இருந்து பூரிகளை பள்ளிக்கு கொண்டு வந்திருக்கிறார். அப்போது ஒரே நேரத்தில் மூன்று பூரிகளை சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிறுவன் மூச்சி விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்” என்றார்.

இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், “எனது பையன் மூன்றுக்கும் மேற்பட்ட பூரிகளை ஒரே சாப்பிட்டதால் மூச்சுத் திணறலை ஏற்பட்டது என்று பள்ளியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இதனால், ஆசிரியர்கள் உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், எனது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  அண்மையில்,  கூட திருவள்ளூர் மாவட்டத்தில் டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்திருக்கிறது.  அதாவது, குழந்தைக்கு டீயில் பிஸ்கட்டை தொட்டு கொடுத்துள்ளனர். அப்போது குழந்தைக்கு திடீரென புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.  இதனை அடுத்து சிறுமி மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. எனவே, சாப்பிடும் போது மெதுவாக சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது மெதுவாக மென்று முழுவதுமாக மென்று சாப்பிட வேண்டும்.

Also Read : தடையை மீறிய லாரி.. சாலையில் தூங்கியவர்கள் மீது ஏறியதில் 5 பேர் பலி!

சரியாக மெல்லாமல் சாப்பிட்டால் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகள் சாப்பிடுவது அருகில் இருந்து கவனிக்க வேண்டும். அதேபோல, மெதுவாக சாப்பிடுவது மிகவும். அது சிறியவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் உணவை மெதுவாக சாப்பிடுவதை உறுதிப்படுத்தி கொள்ளுஙகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News