5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“நான் மனிதப் பிறவியே அல்ல.. இந்த பூமிக்கு என்னை அனுப்பியது கடவுள்தான்” பிரதமர் மோடி பேச்சு

ஒடிசாவில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "நான் எதுவும் செய்யவில்லை. கடவுள் இதை முடிவு செய்துவிட்டார். இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியிருக்கலாம். நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தேன். என் அம்மா படிக்காதவர், பள்ளிக்கூடம் பார்க்கவில்லை. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. என்னைப் பொறுத்தவரை இரண்டு கடவுள்கள் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

“நான் மனிதப் பிறவியே அல்ல.. இந்த பூமிக்கு என்னை அனுப்பியது கடவுள்தான்” பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 May 2024 13:42 PM

”கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார்” நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு ஊடகங்களுக்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில், ஒடிசாவில் பிரச்சாரத்திற்கு இடையே தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நீங்கள் பல இடங்களுக்கு பரப்புரை மேற்கொள்கிறீர்கள். நீங்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்? என்று பிரதமர் மோடியிடன் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மோடி, “முதலில், நான் சொன்னது போல், நான் எதுவும் செய்யவில்லை. கடவுள் இதை முடிவு செய்துவிட்டார். இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியிருக்கலாம். நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தேன். என் அம்மா படிக்காதவர், பள்ளிக்கூடம் பார்க்கவில்லை. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. என்னைப் பொறுத்தவரை இரண்டு கடவுள்கள் உள்ளனர். ஒன்று நம்மால் பார்க்க முடியாதது. மற்றொன்று பொதுமக்கள். நான் பொதுமக்களை கடவுளின் வடிவமாக கருதுகிறேன். மேலும் பொதுமக்கள் என்னை ஆசீர்வதித்த நிலையில் இந்த பணிக்காக என்னை அனுப்பிய இறைவன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.

என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள் தான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பி இருக்கிறார். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள் தான். பயாலாஜிக்கலாக நான் பிறந்திருக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். இவரது வீடியோக்கள் இணையத்தில் டிரண்டாகி வருகிறது.

Also Read : “ஒடிசாவை தமிழர் ஆளலாமா?” பரப்புரையில் அமித்ஷா பேச்சு

இதற்கு முன்னதாக, பூரி தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “பூரி ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்” என்று கூறியிருக்கிறார். பாஜக வேட்பாளரின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு கண்டனம் வலுத்தது. சர்ச்சையை தொடர்ந்து, சம்பித் பத்ரா தனது எக்ஸ் தளத்தில், “பூரியில் பிரதமர் மோடியுடன் பேரணியில் பங்கேற்றேன். அதன்பின்னர் ஏராளமான ஊடகங்களுக்கு பேட்டி அளித்தேன். அனைத்து இடத்திலும் ஜெகன்நாதரின் தீவிர பக்தர் மோடி என்று கூறினேன். தவறுதலாக ஒரு இடத்தில் மாற்றி கூறிவிட்டேன். இந்த தவறுக்காக நான் ஜெகன்நாதரின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

Also Read : ”பாஜக ஆட்சி அமைக்கலன்னா அமித்ஷாவுக்கு சந்தோஷம்” கொளுத்தி போட்ட ப.சிதம்பரம்!

Latest News