”இங்க யாரும் ஸ்பெஷல் கிடையாது” இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து!

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மோடி, "சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை" என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக பேசுகையில், "சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக தான் நான் பேசுகிறேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் குறித்து பேசுகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

”இங்க யாரும் ஸ்பெஷல் கிடையாது” இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து!

பிரதமர் மோடி

Updated On: 

20 May 2024 13:52 PM

மக்களவை தேர்தல்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த முறை பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், அரசியில் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்கள் பறிகப்படும் என்றும் ஊடுருவல்கார்களுக்கு வழங்கப்படும் எனவும் ராமர் கோயில் இடிக்கப்படும் என்றும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

“சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை”

இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மோடி, “சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக பேசுகையில், “சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக தான் நான் பேசுகிறேன்.

Also Read : “ஆம் ஆத்மியை அழிக்க சதி திட்டம்” கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு!

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் குறித்து பேசுகிறேன்.  அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள்.  இவர்கள் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று முடிவு செய்தனர். இப்போது நீங்கள் அதிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். எனவே, இதனை அம்பலப்படுத்துவது எனது பொறுப்பு. பாஜக ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல.

சிறுபான்மையினருக்கு எதிராக இன்று மட்டுமல்ல, ஒருபோதும் பாஜக செயல்படாது. சிறப்பு குடிமக்களாக” யாரையும் ஏற்கத் தயாராக இல்லை. அனைவரையும் சமமாகக் கருதுகிறோம்” என்றார்.

”தென்னிந்தியாவில் தனிப்பெரும் கட்சியாகவும் இருப்போம்”

தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் வேறு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதை ஏற்கத் தயாராக இல்லை. வேறு யாரோ பிரதமராகி 10 ஆண்டுகள் இருப்பதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. தென் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு பலம் இல்லை அல்லது வாக்கு இல்லை என்று எதிர்க்கட்சிகள் கட்டுக்கதையை உருவாக்கியுள்ளனர். 2019 தேர்தலைப் பாருங்கள்.

அப்போதும் தெற்கில் மிகப்பெரிய கட்சி பாஜகதான். இந்த முறை தெற்கில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பதிவு செய்யும். தென்னிந்தியாவில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாகவும், கடந்த முறை இருந்ததை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் தனிப்பெரும் கட்சியாகவும் இருப்போம்” என்றார் மோடி.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?