Prashant Kishor : நான் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மது விலக்கை நீக்குவேன்.. பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

Alcohol Prohibition | நான் தொடர்ந்து மதுவிலக்கை தடை செய்வதை குறித்து பேசிக்கொண்டே இருப்பேன். அது பீகாரின் நலனுக்கு நல்லதில்லை. மதுவிலக்கு நிதிஷ்குமாரின் போலி நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை. தற்போதைய மதுவிலக்கு பயனற்றது என்று அவர் கூறியுள்ளார்.

Prashant Kishor : நான் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மது விலக்கை நீக்குவேன்.. பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

பிரஷாந்த் கிஷோர் (Photo Credit: PTI)

Updated On: 

15 Sep 2024 21:32 PM

மது விலக்கு தடை செய்யப்படும் : நான் ஆட்சிக்கு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மது விலக்கு தடை செய்யப்படும்  என்று பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேட்டிக்கு பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரஷாந்த் கிஷோர் மது விலக்கு குறித்து கூறியது என்ன என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Marriage : “கணவரை சுற்றுலாவுக்கு அனுப்புவேன்”.. மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்!

கட்சி தொடங்குவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்

கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், தற்போது ஜன் சூரஜ் எனும் புதிய கட்சி ஒன்றை துவங்க இருக்கிறார். இந்த நிலையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தனது கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள பிரஷாந்த் கிஷோர், நேற்று அது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது.

இதையும் படிங்க : Harassment : கூட்டு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்!

வெறும் 1 மணி நேரத்தில் மதுவிலக்கை தடை செய்வேன் – பிரசாந்த் கிஷோர்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரஷாந்த் கிஷோர், பிகார் மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் ஜன் சூரஜ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஆட்சி அமைத்த வெறும் 1 மண் நேரத்தில் மாநிலத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களின் வாக்குகளை நான் இழந்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Thirumavalavan : அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம்.. செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்!

தொடர்ந்து பேசிய அவர், நான் தொடர்ந்து மதுவிலக்கை தடை செய்வதை குறித்து பேசிக்கொண்டே இருப்பேன். அது பீகாரின் நலனுக்கு நல்லதில்லை. மதுவிலக்கு நிதிஷ்குமாரின் போலி நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை. தற்போதைய மதுவிலக்கு பயனற்றது என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம்

தற்போது இருக்கும் மதுவிலக்கு மதுவை வீட்டிற்கே விநியோகிக்க வழிவகுக்கிறது. இதனால் மாநிலத்திற்கு ரூ.20,000 கோடி கலால் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகமாக உள்ள ஜன் சூராஜ் கட்சி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..

பாகவும் காங்கிரஸும் பழியை பகிர்ந்துக்கொள்கின்றனர்

பீகாரின் தற்போதைய இந்த நிலமைக்கு நிதிஷ் குமாரும் அவரது முன்னோடி லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் தான் காரணம். மேலும் பீகாரின் பாகவும், காங்கிரஸும் பழியை பகிர்ந்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுவிலக்கை அமல்படுத்த வலுக்கும் கோரிக்கைகள்

நாடு முழுவதும் மதுக்கடைகள் மற்றும் மது சார்ந்த பிரச்னைகள் பூதாகாரமாக உருவெடுத்து வருகின்றன. மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை முன்னெடுத்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் மதுவில்லை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருக்கும் சூழலில் பிரஷாந்த் கிஷோர் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்றும் அதனால் பெண்களின் வாக்குகள் வரவில்லை என்றாலும் கவலையில்லை என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!
கிராமத்து லுக்கில் நடிகை அதிதி ஷங்கர்!