Sabarimala: சபரிமலை போகும் பக்தர்களுக்கு சிக்கல்.. இந்த தப்பை பண்ணாதீங்க!
Ayyappan Temple: குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் முன்பதிவு செய்யாமல் பக்தர்கள் நேரடியாக சபரிமலைக்கு வருவதால் அவர்களுக்கு என தனியாக ஸ்பாட் புக்கிங் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனிடையே இந்த ஆண்டுக்கான மண்டலவிளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்திற்கான நடைதிறப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.
சபரிமலை: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் நடை திறக்கப்பட்டு அடுத்த 5 தினங்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிவித்து, விரதம் இருந்து, இருமுடி கட்டி, பெரும்பாதை அல்லது சிறுபாதை வழியாக சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பொறுத்தவரை கார்த்திகை, மார்கழி மாதம் தான் விசேஷம் நிறைந்ததாகும். வரும் நவம்பர் 15ஆம் தேதி மாலை மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அந்த நாள் தொடங்கி அடுத்த 48 நாட்களுக்கு கட்டுக்கடங்கா கூட்டம் சபரிமலைக்கு வருகை தருவது வழக்கம்.
சபரிமலை சீசன் என இந்த காலகட்டத்தை குறிப்பிடும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலவிதமான நடவடிக்கைகளை கேரள மாநில அரசு மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு எடுத்து வருகிறது. அதன்படி சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டு அதை பின்பற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மண்டல பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஆகிய நிகழ்வுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
Also Read:Sabarimala: சபரிமலை பக்தர்கள் உஷார்.. மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்த போலீசார்!
ஸ்பாட் புக்கிங் வசதி
அதாவது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் முன்பதிவு செய்யாமல் பக்தர்கள் நேரடியாக சபரிமலைக்கு வருவதால் அவர்களுக்கு என தனியாக ஸ்பாட் புக்கிங் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனிடையே இந்த ஆண்டுக்கான மண்டலவிளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்திற்கான நடைதிறப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
Also Read: Dream Astrology: கனவில் வெள்ளை விலங்குகள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
வெளியிடப்பட்டுள்ள புதிய வழிக்காட்டுதல்கள்
அதன்படி சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த பக்தர்கள் சரியாக முன்பதிவு செய்த நாட்களில் மட்டுமே வர வேண்டும். ஒருவேளை நீங்கள் சபரிமலைக்கு வரும் தேதியை மாற்ற முடிவு செய்தால் முதலில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். இதனை வாட்ஸ்அப் லிங்க் மூலமாகவோ அல்லது இணையதள வாயிலாகவும் செய்யலாம். அவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் சீசன் காலத்தில் சம்பந்தப்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியாது.
மேலும் முன்பதிவு செய்தும் திட்டமிட்ட தரிசனத்தை தவறவிடுபவர்கள் இடங்கள் ஸ்பாட் புக்கிங் முறை மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும். பம்பை, எருமேலி, வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய நுழைவு வாயில்களில் ஸ்பாட் புக்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 12 மணி நேரத்திற்குள் தங்களின் தரிசனத்தை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்பாட் புக்கிங் செய்ய நினைக்கும் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அளிக்கப்படும் ஒப்புகை சீட்டில் புகைப்படம் இடம்பெற்று இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமி ன்றி பக்தர்கள் நடப்பாண்டு இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றின் பெரும்பகுதி வீணாக எரிக்கப்படுவதால் தேவசம்போர்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு முதல் இருமுடிக்கட்டுடன் விமானங்களில் பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியதால் ஏராளமான பக்தர்கள் விமானம் மூலம் நாடு முழுவதும் இருந்து வருகின்றனர். மேலும் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் ஆகியவையும் இயக்கப்படுவது வழக்கம். சீசன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.