3D Brain Maps: உலகிலேயே முதன்முறை.. மனித மூளையின் 3D படங்களை வெளியிட்ட ஐஐடி மெட்ராஸ்!

IIT Madras: ’தரணி’ என்று பெயரிடப்பட்ட இந்த தரவுத் தொகுப்பு, ஆராய்ச்சி நரம்பியல் துறையில் பெரும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், குழந்தைகளுக்கு மூளையை பாதிக்கும் பல நோய்களுக்கு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

3D Brain Maps: உலகிலேயே முதன்முறை.. மனித மூளையின் 3D படங்களை வெளியிட்ட ஐஐடி மெட்ராஸ்!

ஐஐடி மெட்ராஸ் (Image: IIT madras)

Published: 

11 Dec 2024 19:31 PM

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்) பெண்ணின் கருவில் இருக்கும்போதே இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களில் இருந்து வளரும் 5 குழந்தைகளின் மூளையின் விரிவான 3D வரைப்படத்தை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், மனித கருவில் வளரும் குழந்தைகளின் மூளையின் மிக விரிவான 3D உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஜிட்டல் தரவு தொகுப்பை வெளியிட்டு வரலாற்று சாதனையை ஐஐடி மெட்ராஸ் படைத்துள்ளது.

’தரணி’ என்று பெயரிடப்பட்ட இந்த தரவுத் தொகுப்பு, ஆராய்ச்சி நரம்பியல் துறையில் பெரும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், குழந்தைகளுக்கு மூளையை பாதிக்கும் பல நோய்களுக்கு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ALSO READ: பாராளுமன்றத்தில் பாகுபாடு, ஸ்கூல் ஹெட்மாஸ்டர்.. தங்கரை ஒரு பிடிபிடித்த கார்கே!

ஆராய்ச்சி:

சென்னை ஐஐடி சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் மோகன்சங்கர் சிவப்பிரகாசம் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ருமேனியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், சென்னையை அடிப்படையாக கொண்ட மெடிசின் சிஸ்டம்ஸ் மற்றும் சவிதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை ஐஐடி மெட்ராஸ் குழுவுடன் ஆராய்ச்சியை மேற்கொண்டது.

கண்டுபிடிப்பின் பயன் என்ன..?

ஐஐடி சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் உருவாக்கிய இந்த தொழில்நுட்பமானது, மனித மூளை பற்றிய ஆய்வை புதிய உச்சத்திற்கு எடுத்து செல்லும் என்று கூறப்படுகிறது. அதாவது சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை மேப்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 5,132 மூளைப் பிரிவுகளை டிஜிட்டல் முறை கண்டறியலாம். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இதன்மூலம், கருவில் இருந்து குழந்தை வரை, இளமைப் பருவம் மற்றும் இளம் வயது வரை மூளை வளர்ச்சி எப்படி உள்ளது, கற்றல் குறைபாடுகள் மற்றும் மன இறுக்கம் போன்ற வளர்ச்சி குறைபாடுகளை புரிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவு, அதிக தாக்கம்:

மேற்கத்திய நாடுகளை விட பத்து மடங்கு குறைவான செலவில் இத்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய ஆராய்ச்சியாளர்களின் திறன் உலகம் முழுவதும் வியக்க வைத்துள்ளது. மேலும், இது நரம்பியல் துறையின் முன்னேற்றத்தை தருவதோடு, மூளையை பாதிக்கும் பிரச்சனைகளை எளிதாக கண்டறிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு இந்த ஆராய்ச்சி ஏன் முக்கியமானது..?

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. அதன்படி, கரு முதல் இளமை பருவம் வரையிலான மூளை வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கும், மன அழுத்தம் மற்றும் கற்றல் குறைபாடுகள் போன்ற வளர்ச்சி பிரச்சனைகளை கண்டறிவதற்கும் இந்த ஆராய்ச்சி மிக முக்கியமானது.

ALSO READ: ரூ.1,751 கோடி.. பி.எம் விஸ்வகர்மா யோஜனா.. யாருக்கு கடன் கிடைக்கும்?

இந்த ஆராய்ச்சியானது கருவின் ஆரம்ப கட்டங்களில் வளர்ச்சி கோளாறுகளை கண்டறிந்து உடனடி சிகிச்சையளிப்பதை சாத்தியமாக்கும். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் 500க்கும் மேற்பட்ட மூளை பகுதிகளை கண்டறிந்து வகைப்படுத்தியுள்ளனர். இது உலகளாவிய நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு விலைமதிப்பற்ற ஆதாரமாக இருக்கும்.

இதுகுறித்து பேசிய இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட், “ மனித கருவின் மூளையின் டிஜிட்டல் மேப்பிங்கில் இந்தியா முதல் முறையாக முன்னணியில் உள்ளது. இந்த சாதனை உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
மாதுளை இலைகளில் கிடைக்கும் ஏராள நன்மைகள்!