5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. இந்த மூவர்ண ரெசிப்பிக்களை செய்து அசத்துங்க..

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தில் நாட்டு பற்றோடு தேசிய கொடியை வணங்குவார்கள்.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. இந்த மூவர்ண ரெசிப்பிக்களை செய்து அசத்துங்க..
மாதிரி புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 15 Aug 2024 08:57 AM

சுதந்திர தினம் 2024: இந்தியாவின் 78வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு எண்ணற்ற முகம் தெரியாத மக்கள் தொடங்கி முன்னணி தலைவர்கள் வரை உயிர் நீத்துள்ளனர். 16 வயது குதிராம் போஸ் துவங்கி 78 வயதில் இறந்த காந்தி வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவு கூறப்பட வேண்டியவர்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தில் நாட்டு பற்றோடு தேசிய கொடியை வணங்குவார்கள்.

இப்படி தான் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு பிடித்தவாறு கொண்டாட்டங்களை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்றால் கூட வீட்டில் இருந்தப்படியே சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழலாம். வீட்டில் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி சுதந்திர உணர்வை போற்றும் வகையில் வீட்டில் மூவர்ண நிறத்தில் உணவுகளை சமைத்து பரிமாரலாம்.

மேலும் படிக்க: 78வது சுதந்திர தினம்.. வாட்ஸ்அப் ஸ்டேடஸில் பகிர்வதற்கான வாழ்த்து செய்திகள்..

ரெசிபி லிஸ்ட்:

மூவர்ண இட்லி:

நம் தேசிய கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களை போலவே, மூன்று வண்ணங்களில் இட்லியை சமைத்து சாப்பிடலாம். கேரட் இட்லி, புதினா இட்லி மற்றும் வெறும் இட்லியை செய்து சாப்பிடலாம்

மூவர்ண கலவை சாதம்:

மூவர்ண இட்லியை போலவே மூவர்ண கலவை சாதம் செய்து அசத்தலாம். தேசிய கொடியில் இருக்கும் காவி நிறத்திற்கு குங்கும பூ சாறு கலந்த பட்டாணி புலாவ் செய்யலாம், வெள்ளை நிறத்திற்கு தேங்காய் பால் சாதம் மற்றும் பச்சை நிறத்திற்கு புதினா சாதம் செய்யலாம்.

மூவர்ண சப்பாத்தி: ‘

மிகவும் சுலபமாக செய்யக்கூடியம் ஒரு உணவு என்றால் அதில் சப்பாத்தி நிச்சயம் இடம்பெற்றிருக்கும். தேசிய கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக, பாலக் கீரை போட்ட பாலக் சப்பாத்தி, சாதரண சப்பாத்தி மற்றும் கேரட் சாறு அல்லது ஜூஸ் கலந்த கேரட் சப்பாத்தி.

மூவர்ண ஹல்வா:

ஹல்வா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வழக்கமாக விஷேச நாட்களில் இனிப்பு இல்லாமல் ஒரு சாப்பாடு இருக்க முடியாது. சுதந்திர தினத்தை கொண்டாட தேசிய கொடியில் இருக்கும் மூன்று நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் முவர்ண ஹல்வா செய்து சாப்பிடலாம். வெள்ளை நிறத்திற்கு வெள்ளை பூசணி போட்ட ஹல்வா, பச்சை நிறத்திற்கு நம் சுவைக்கு ஏற்ப வெற்றிலை அல்லது ஃபுட் கலர் சேர்த்து ஹல்வா செய்யலாம், ஆரஞ்சு நிறத்திற்கு கேரட் ஹல்வா செய்து கொடுக்கலாம்.

மூவர்ண தோசை:

மூவர்ண இட்லியை போலவே மூவர்ண தோசை செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாக இருக்கும். தேசைக்கு ஏற்ப புதினா சட்னி, கார சட்னி மற்றும் தேங்காய் சட்னி செய்து கொடுக்கலாம்.

 

Latest News