5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Independence Day 2024: காந்தி முதல் பகத் சிங் வரை.. சுதந்திர போராட்ட தியாகிகளின் சிறப்பான பொன்மொழிகள்!

சுதந்திர தினம் 2024: கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது.

Independence Day 2024: காந்தி முதல் பகத் சிங் வரை.. சுதந்திர போராட்ட தியாகிகளின் சிறப்பான பொன்மொழிகள்!
காந்தி – பகத் சிங்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Aug 2024 08:57 AM

சுதந்திர தினம்: கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது. அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் இரவில் அனைவரும் தூக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த இரவில் இந்தியாவின் முதல் பிரதமர் ஐவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடியேற்றினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றி, குடிமக்ளுக்கு உரை நிகழ்த்தி வருகின்றனர். இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நம் பேராட்டத்தையும், தியாகத்தையும் வரலாற்றையும் பறைசாற்றும் வகையிலான பொன்மொழிகளை பார்க்கலாம்.

மகாத்மா காந்தி:

தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுவார் மகாத்மா காந்தி. இந்திய விடுதலைப் போராட்டததை தலைமையேற்று நடத்தியவர் காந்தி. சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு கடுமையாக பாடுபட்டவர். மேலும், ஒத்துழையாமை, வெள்ளையனே வெளியேறு போன்ற முக்கியமான இயக்கங்களை தொடங்கினார். இவரது பொன்மொழிகளை பார்ப்போம்.

  • வாய்மையே வெல்லும். உண்மையை தவிர மற்றவை கால போக்கில் மறைந்துவிடும்.
  • சுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு- ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?
  • செய் அல்லது செத்து மடி என்பதே விடுதலைக்கான வழியாக இருக்கும்.
  • இந்த உலகில் மாற்றம் கொண்டு வர விரும்பினால் முதலில் உன்னிடம் இருந்து மாற்றத்தை தொடங்கு
  • மிருகங்களை போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
  • வலிமயும் வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை
  • மனிதனாக இருப்பது அல்ல மனிதம். மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.

அம்பேத்கர்:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியர் அம்பேத்கர். புரட்சியாளர், சிந்தனையாளர், சட்டமேதை என்று போற்றப்படுபவர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவில் சாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மாற்றங்கள் வர என்ன செய்ய வேண்டுமோ அதற்காக போராடியவர்.

  • தன்னை உயர்ந்த சாதியாகவும், பிறரை தாழ்ந்த சாதியாகவும் கருதுபவன் மனநோயாளி.
  • பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள் தான். சிங்கங்கள் அல்ல. நீங்கள் சிங்கங்களாக இருங்கள்..
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை கற்பிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்.
  • நான் யாருக்கும் அடிமையில்லை. யாரும் எனக்கு அடிமையும் இல்லை..
  • ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த சமூகத்தின் பெண்கள் அடைந்திருக்க கூடிய முன்னேற்றத்தை வைத்தே நான் அளவிடுவேன்.

பகத் சிங்:

தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர் பகத் சிங். தூக்கிலிடப்பட்டு இறந்தால் மண்ணில் கால்படாமல் போகுமே என்று வருந்தியவர். தன உயிர்போகும் கடைசி நேரத்திலும் இந்தியாவின் விடுதலையை பற்றி மட்டுமே சிந்தித்தார்.

  • மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள வரை தான் சட்டம் அதன் புனித தன்மையை பெற்றிருக்கும்.
  • புரட்சியின் மூலம் இந்த சமூக அமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  • புரட்சி என்பது மனிதகுலத்தின் மறுக்கப்பட முடியாத உரிமை. சுதந்திரம் என்பது யாருக்கும் மறுக்கப்பட முடியாத பிறப்புரிமை.
  • எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது. அது மனிதனின் மூளையை முடமாக்கி அவனை பிற்போக்கில் தள்ளிவிடும்.
  • அநீதிக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை. எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை.

ஐவஹர்லால் நேரு:

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு. சுதந்திர போராட்டத்திலும் சரி, அதற்கு பிறகான காலத்திலும் அவர் ஆற்றிய பங்கு என்பது மகத்தானது.

  • உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை
  • ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.
  • ஜனநாயகம் நல்லது. இதைச் செல்வதற்கு காரணமே மற்ற அமைப்புகள் மிக மோசமாக இருப்பது.
  • எதிர் காலத்தை கணிப்பதற்கு சிறந்த வழி அதை உருவாக்குவதே.
  • ஜனநாயகம் தான் சிறந்த அரசுமுறை. அதில் தான் தாங்கள் ஆளப்படுவதைப் பற்றி மக்கள் கருத்த தெரிவிக்கவும் அதன் தலைவர்களை பொறுப்புக்குள்ளாக்கவும் முடியும்.

Latest News