5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Independence Day 2024: கருணாநிதி பெற்று தந்த உரிமை.. இன்றைக்கு முதல்வர்கள் கொடியேற்ற காரணம் அவர்தான்!

சுதந்திர தினம் 2024: நாடு தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தது எப்படி என்பதை பார்ப்போம்.  மத்திய மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக கருதப்படும் ஆளுநர்கள் மாநில அரசுடன் முட்டி மோதி வருகின்றனர்.

Independence Day 2024: கருணாநிதி பெற்று தந்த உரிமை.. இன்றைக்கு முதல்வர்கள் கொடியேற்ற காரணம் அவர்தான்!
கருணாநிதி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Aug 2024 08:56 AM

மாநில உரிமையை பெற்று தந்த கருணாநிதி: கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நிலையில், நாடு தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தது எப்படி என்பதை பார்ப்போம்.  மத்திய மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக கருதப்படும் ஆளுநர்கள் மாநில அரசுடன் முட்டி மோதி வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்குவங்கம் பஞ்சாப் என எதிர்கட்சிகள் ஆளும் மட்டுமே மாநிலங்ககளில் மட்டுமே இந்த நிலை நீடிக்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு ஆதரவாக பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

Also Read: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தேசியக் கொடி வைக்கனுமா? இந்த போட்டோவை ட்ரை பண்ணுங்க!

முதல்வர்கள் கொடியேற்றம்:

ஆம், திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் பிற்காலத்தில் மாநில உரிமைக்கான முழக்கங்களாக மாறின. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முதலமைச்சர்கள் கொடியேற்றுவதை சொல்லலாம். சுதந்திர கிடைத்ததில் இருந்து 1973ஆம் ஆண்டு வரை சுதந்திர தினம், குடியரசு தினத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் கோட்டையில் கொடி ஏற்றி வந்தனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரநிதிகள் அமைதியாக நின்றிருக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வந்தனர்.  அதனால், பல கோடி மக்களை தேர்வு செய்த மாநில முதலமைச்சர் கொடி ஏற்றுவதுதானே முறையாக இருக்கும் என்ற நோக்கில் சிந்தித்து அந்த உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி.

1969ஆம் ஆண்டு மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழகத்துடன் முதலமைச்சர் பதவியை ஏற்ற கருணாநிதி, தனது முழகத்திற்கு செயல்வடிவம் பல பணிகளை செய்தார். அதன் உச்சமாக, ஆட்சிக்கு அதே ஆண்டுகளில் கொடியேற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு பெற்று தந்தார். அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கான உரிமை கோரி கடிதம் எழுதினார் கருணாநிதி.

Also Read: ”சமூக படிநிலைகள் இருக்கக் கூடாது” சுதந்திர தினம் உரையில் குடியரசுத் தலைவர் முர்மு வேண்டுகோள்!

இந்த கோரிக்கை ஏற்ற இந்திரா காந்தி, முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்றும், ஆளுநர்கள் குடியரசுத் தினத்தன்றும் கொடியேற்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, 1974ஆம் ஆண்டு ஆளுநருக்கு பதிலாக அப்போதைய முதல்வர் கருணாநிதி கொடியேற்றினார். முதல்வராக இருந்த சமயத்தில் கருணாநிதி 14 முறை கொடியேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News