5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Independence Day 2024: அனல் பறந்த பேச்சு.. செங்கோட்டையில் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை.. சுதந்திர தினத்தில் என்ன பேசினார்?

சுமார் 200 ஆண்டுகளாக இந்தியர்களை அடிமையாகளாக நடத்தி வந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்டிய இந்திய சுதந்திர போர் பல சவால்களை உள்ளடக்கியது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது.

Independence Day 2024: அனல் பறந்த பேச்சு.. செங்கோட்டையில் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை.. சுதந்திர தினத்தில் என்ன பேசினார்?
நேரு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Aug 2024 08:57 AM

சுதந்திர தினம்: சுமார் 200 ஆண்டுகளாக இந்தியர்களை அடிமையாகளாக நடத்தி வந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்டிய இந்திய சுதந்திர போர் பல சவால்களை உள்ளடக்கியது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது. அன்றைய நாள் இரவில் அனைவரும் தூக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த இரவில் இந்தியாவின் முதல் பிரதமர் ஐவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடியேற்றினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 15 நள்ளிரவில் ‘Tryst With Destiny’  என உரையை ஆற்றினார். இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று வரை அனைவரின் மத்தியில் பிரபலமானதாகவும் உள்ளது. எனவே, சுதந்திரம் கிடைத்த நாளில் ஐவஹர்லால் நேரு என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.

நேருவின் முதல் உரை:

”நாம் இன்று சுதந்திர மக்கள். இன்று முழுமையான அரசு உரிமை பெற்றுள்ளோம். உலகம் உறங்கும் நள்ளிரவு நேரத்தில், இந்தியா விழித்து கொண்டது. இந்தியாவுக்காகவும் இந்திய சுதந்திர லட்சியத்துக்காகவும் பல ஆண்டுகளாக சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்திய மக்களின் நலனுக்காக சேவை செய்ய நான் அர்ப்பணம் செய்து கொண்டுள்ளேன். இன்று நாம் கொண்டாடும் சாதனை, நமக்குக் காத்திருக்கும் பெரிய வெற்றிகள் மற்றும் சாதனைகளுக்கான ஒரு படி. சுதந்திரம் பிறப்பதற்கு முன், நாம் அனைத்து வலிகளையும் சகித்துக் கொண்டோம்.

Also Read: 78வது சுதந்திர தினம்.. இஸ்ரோவின் தொடர் சாதனையால் தலைநிமிர்ந்து நிற்கும் இந்தியா..

இந்த துயரத்தின் நினைவால எங்கள் இதயம் கணக்கிறது. அந்த வலிகளில் இப்போது புதிய பாதை தொடந்து இருக்கிறது. கடந்த கால முடிந்துவிட்டது. எதிர்காலம் இப்போது நம்மை அழைக்கிறது. அந்த எதிர்காலம் எளிதாகவோ அல்லது ஓய்வெடுக்கவோ அல்ல. நாம் அதிக உழைக்க வேண்டும் என்தை உறுதி செய்வோ. பாமர மக்கள் மீதுள்ள சுமை குறைந்து வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் நாம் விவேகமாகத் திட்டம் வகுக்க வேண்டும். நாம் யாருக்கும் கெடுதல் எண்ணவில்லை.

நாம் உழைக்க வேண்டும், உழைக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், நம் கனவுகளை நனவாக்க வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்கானவை. வறுமை, நோய்களை எதிர்த்துப் போராட வேண்டும். ஒரு வளமான, ஜனநாயக மற்றும் முற்போக்கான தேசத்தை கட்டியெழுப்பவதை உறுதி செய்ய வேண்டும். நமது மாபெரும் தலைவர் காந்தி கற்றுக் கொடுத்த சித்தாந்தங்களைப் பின்பற்றி உறுதியுடன் புதிய வேலைகளில் ஈடுபட வேண்டும். காந்தி இப்போபது நம்முடன் இருப்பது நமக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம்.

நாம் கடைப்பிடிக்கும முறை சரியாக இருந்தால் தான் நாம் அடையும் சாதனையும் சரியாக இருக்கும் என காந்தி ஜி நமக்கு வெகு நாளைக்கு முன்பே கற்றுக் கொடுத்தார். கிழக்கு பகுதியில் உள்ள இந்த நாட்டில் இப்போது பிறந்துள்ள சுதந்திரத்தை உலகம் முழுவதும் கவனித்து பார்த்து வருகிறது. இந்த சுதந்திரம் எந்த வகையில் வேலை செய்யப்போகிறது என்பது உலக நாடுகள் ஆச்சர்யத்துடன் உற்று நோக்கி வருகிறது. இந்த 75 ஆண்டு கால வரலாற்றில் பல சவால்களை சந்தித்துள்ளோம். எல்லாவற்றுக்கும் அப்பால் ஜனநாயகம் நிலைத்திருக்கிறது. ஜெய் ஹிந்த்”  என்று பேசியுள்ளார்.

Latest News