Independence Day 2024: தேசியக் கொடியை ஒழுங்கா ஏத்தலனா சிறைக்கு வாய்ப்பு.. சுதந்திர தினத்துக்கு முன்பு இதை படிங்க!
இந்திய சுதந்தர தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி பலரும் தேசியக் கொடியை தங்கள் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலங்களில் ஏற்றுவார்கள். ஆனால், தேசியக் கொடியை ஏற்றும்போதும் இறக்கும்போது சில தவறுகளை பலர் செய்வார்கள். இதனால், அவர்கள் மீது வழக்குப்பதிவு வரை செல்லக்கூடிய நிலை வரும். எனவே, நமது தேசியக் கொடியை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.
சுதந்திர தினம்: மன்னராட்சியால் சிதறிக்கிடந்த சிறு சிறு நாடுகளை தன் ராணுவ பலத்தால், வெள்ளையர்கள் ஒருங்கிணைத்து ஆட்சி செய்து வந்தனர். கி.பி.1880ஆம் ஆண்டு காலத்தில் தென் தமிழ்நாட்டில் மருது சகோதர்களால் எதிர்க்கப்பட்டது தொடங்கி 1942ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை வெள்ளையரின் ஆட்சிக் கட்டுப்பாட்டில் இருந்த இப்போதைய இந்தியா, பல்வேறு வீரர்கள், தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்களின் தியாகத்தாலும், போராட்டத்தாலம் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய சுதந்தர தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி பலரும் தேசியக் கொடியை தங்கள் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலங்களில் ஏற்றுவார்கள். ஆனால், தேசியக் கொடியை ஏற்றும்போதும் இறக்கும்போது சில தவறுகளை பலர் செய்வார்கள். இதனால், அவர்கள் மீது வழக்குப்பதிவு வரை செல்லக்கூடிய நிலை வரும். எனவே, நமது தேசியக் கொடியை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.
தேசியக் கொடி ஏற்றும் முறை:
இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) மற்றும் இந்தியாவின் கொடி குறியீடு ஆகியவை இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்கும் பயன்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்களை அமைத்துள்ளன. அதன்படி, கொடி குறியீட்டின் பிரிவு 2-ன்படி அனைத்து குடிமக்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை அனுமதிக்கிறது. தேசியக் கொடிக்கு மரியாதை அளிக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு முகாம்கள், போன்ற கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றலாம். தேசியக் கொடியை ஏற்றும்போது சின்னத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மரியாதை மற்றும் கண்ணியத்துடன் செய்ய வேண்டும்.
Also Read: 78வது சுதந்திர தினம்.. முக்கிய இயக்கங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் வரை.. ஓர் அலசல்..
சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் பிற முக்கியமான தேசிய மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கொடி ஏற்றப்பட வேண்டும். தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் வணக்கம் செலுத்த வேண்டும். தேசியக் கொடி எப்பொழுதும் முக்கிய இடத்தில் ஏற்றப்பட வேண்டும். கொடியை ஏற்றுபவர்கள் மரியாதைக்குரிய உடையை அணிந்திருக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத போது, கொடியை அழகாக மடித்து மரியாதையான முறையில் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும்.
செய்யக் கூடாதாவை:
இந்திய தேசியக் கொடி தலைகீழாக பறக்க கூடாது. தலைகீழாக தேசியக் கொடியை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராமும் விதிக்கப்படலாம். தேசியக் கொடியில் மேலே காவி நிறமும், அடியில் பச்சை நிறமும், நடுப்பகுதியில் வெள்ளை நிறமும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கிழிந்த அல்லது சேதம் அடைந்த தேசியக் கொடியை பறக்கவிடக் கூடாது. தேசியக் கொடியை பறக்கவிடும்போது அதைவிட உயரமாக எந்தவொரு பொருளையும் அருகில் வைக்கக் கூடாது.
உதாரணமாக வேறு எதாவது நிறத்திலான கொடி அல்லது அலங்காரப் பொருட்கள் என எதுவும் தேசியக் கொடியின் உயரத்துக்கு மேலே இருக்கக் கூடாது. தேசியக் கொடியை அலங்காரப் பொருட்களாக பயன்படுத்த கூடாது. அதாவது, தேசியக் கொடியாக வைக்கலாம். சட்டைகளில் குத்திக் கொள்ளலாம். பூக்கள் அல்லது வேறு வடிவங்களில் தேசியக் கொடியை வைக்கக் கூடாது.
Also Read: 78வது சுதந்திர தினம்.. வாட்ஸ்அப் ஸ்டேடஸில் பகிர்வதற்கான வாழ்த்து செய்திகள்..
தேசியக் கொடியை ஏற்றும்போது எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ அதைவிட இறக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தேசியக் கொடி தரையில் படக் கூடாது. தேசியக் கொடியின் மீது எந்தவொரு வாசகங்களும் எழுதப்பட்டியிருக்கக் கூடாது. கொடியை மிதிப்பது, வேண்டுமென்றே தரையில் போடுவது அல்லது தண்ணீரில் போடுவதன் என அதன் கண்ணியத்தை குலைக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடியை இரவில் ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.