5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Independence Day 2024: இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைந்த வேலூர் சிப்பாய் புரட்சி… நடுநடுங்கிய ஆங்கிலேயர்கள்!

சுமார் 200 ஆண்டுகளாக இந்தியர்களை அடிமையாகளாக நடத்தி வந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்டிய இந்திய சுதந்திர போர் பல சவால்களை உள்ளடக்கியது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது.

Independence Day 2024: இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைந்த வேலூர் சிப்பாய் புரட்சி… நடுநடுங்கிய ஆங்கிலேயர்கள்!
வேலூர் சிப்பாய் புரட்சி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Aug 2024 08:57 AM

சுதந்திர தினம்: சுமார் 200 ஆண்டுகளாக இந்தியர்களை அடிமையாகளாக நடத்தி வந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்டிய இந்திய சுதந்திர போர் பல சவால்களை உள்ளடக்கியது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது. லட்சகணக்கானோரின் உயிர் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் பற்றி பலருக்கு தெரிவதில்லை.  குறிப்பாக இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய சுதந்திர போராட்டம் குறித்து அறிந்து கொள்ள இளைய தலைமுறையினர் விரும்பவதில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கடந்த வேண்டிய சூழல் இப்போது உருவாகி உள்ளது. அந்த வகையில், நமக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்பது குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த தேசத்திற்கும் சுதந்திர உணர்வை வித்திட்டது தமிழ்நாடு தான். இந்தியாவில் முதல் சுதந்திர போராட்டமாக கருதப்படும் ’வேலூர் சிப்பாய் புரட்சி’ பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

வேலூர் சிப்பாய் புரட்சி:

1606 முதல் 1672ஆம் ஆண்டு வரை விஜய நகர அரசின் தலைநகராய் வேலூர் இருந்தது. அதன்பிற்கு 1768ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. அங்கு 1500 சிப்பாய்களும், 370 ஆங்கிலப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடந்த போரில் ஆங்கிலேயர்களால் திப்புசுல்தான் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அவரது 12 மகன்கள், 8 மகள்கள், உறவினர்கள் என சுமார் 1300 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பணி செய்ய வந்த 1,800 பேர் கோட்டைக்கு வெளியே தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் மட்டும் தினமும் பல்லக்கில் கோட்டைக்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி இவர்கள் சில ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மதாராஸ் படைக்கு முதன்மை தளபதியாக இருந்த சர்ஜான் கிரேட் வேலூர் கோட்டையை பாதுகாத்து வந்தார்.

இவர் 1806ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் உள்ள இந்திய சிப்பாய்களுக்கு மத ரீதியான கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அதாவது, பன்றி, பசுவின் தோலினால் செய்யப்பட்ட புதிய தலைப்பாகைகளை அணியவும், இஸ்லாமிய சிப்பாய்கள் தாடியை அகற்றி மீசை வைத்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு இந்திய சிப்பாய்கள் மறுத்தனர். இஸ்லாமியர்கள் பன்றியை புனிதமாக கருதுவதில்லை. இந்துக்கள் பசுவை தெய்வாக கருதுகின்றனர். இதனால், சர்ஜான் கிரேட் விதித்த உத்தவுகளை இந்திய சிப்பாய்கள் ஏற்க மறுத்தனர்.

மத ரீதியான கட்டுப்பாடுகள்:

மேலும், மார்பில் சிலுவை சின்னம் போட வேண்டும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய சிப்பாய்கள் தங்களை மதமாற்றம் செய்ய வற்புறுத்தவதாக கூறினர். இதனால் கர்னல் டேரில் தினமும் 100 சவுக்கடியும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்தார். இதனால், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் புரட்சி செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து திப்பு சுல்தானின் மூத்த மகன் மைசூத்தீனிடமும் கூறி திட்டம் போட்டனர்.

திட்டத்தின்படி ஜூலை மாதம் 10ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு இந்திய சிப்பாய்கள் அணிவகுத்து மரியாதை நடக்கும் இடத்தில் ஒன்று கூடினர். பின்னர், ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை கைப்பற்றி அங்கிருந்து ஆயுதங்களை எடுத்து ஆங்கிலேயர்கள் தங்கி இருந்த அறைகளுக்கு சென்று கண்ணில் படுபவர்களை சுட்டுக் கொன்றனர். பின்னர், கோட்டை கொடி மரத்தில் இருந்த ஆங்கில அரசின் கொடியை இறக்கி திப்புசுல்தானின் புலிக்கொடியை ஏற்றினர்.

நினைவு தினம்:

இதுகுறித்து ராணிப்பேட்டையில் இருந்த தலைமை அதிகாரி ஜில்லப்ஸி அறிய, பெரிய படைகளுடன் அடுத்த நாள் காலை 7 மணிக்கு கோட்டைக்கு வந்து இந்திய சுப்பாய்களை சுட்டுக் கொன்றனர்.  சிப்பாய் புரட்சி 24 மணி நேரத்தில் கடுமையான முறையில் ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்டது. புரட்சிக்கு காரணமாக 100க்கும் மேற்பட்டோரை ஆங்கிலேயர்கள் மரத்தில் தூக்கிலிட்டனர். கொல்லப்பட்டவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கோட்டை அகழில் வீசப்பட்டனர். ஜூலை 10ஆம் தேதி வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி தான் இந்திய சுதந்திர போருக்கு வித்திட்டது. இதனை நினைவுப்படுத்தும் வகையில் 1998ஆம் ஆண்டு இந்தியா சிப்பாய்களுக்கு நினைவு தூண் வைக்கப்பட்டது. இதற்கு ஆண்டுதோறும் மலரஞ்சிலி நடக்கிறது.

 

Latest News