5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. வாட்ஸ்அப் ஸ்டேடஸில் பகிர்வதற்கான வாழ்த்து செய்திகள்..

16 வயது குதிராம் போஸ் துவங்கி 78 வயதில் இறந்த காந்தி வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவு கூறப்பட வேண்டியவர்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள்.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்..  வாட்ஸ்அப் ஸ்டேடஸில் பகிர்வதற்கான வாழ்த்து செய்திகள்..
மாதிரி புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Nov 2024 22:49 PM

சுதந்திர தினம் 2024: இந்தியாவின் 78வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு எண்ணற்ற முகம் தெரியாத மக்கள் தொடங்கி முன்னணி தலைவர்கள் வரை உயிர் நீத்துள்ளனர். 16 வயது குதிராம் போஸ் துவங்கி 78 வயதில் இறந்த காந்தி வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவு கூறப்பட வேண்டியவர்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தில் நாட்டு பற்றோடு தேசிய கொடியை வணங்குவார்கள்.

அன்றைய தினம் நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து சுதந்திர தினத்தை அந்தந்த பகுதிகளில் கொண்டாடி மகிழ்வார்கள். இது ஒரு பக்கம் இருக்க இன்றைய நவீன காலக்கட்டத்தில் சுதந்திர தின வாழ்த்தை நேரில் சென்று கூற முடியவில்லை என்றால் கூட நமக்கு தொழில்நிட்பம் உறுதுணையாக இருக்கிறது. நம் நாட்டின் மீது நாம் வைத்திருக்கும் தேசப்பற்றை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் மூலம் பிறருக்கு தெரிவிக்கலாம். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

மேலும் படிக்க: மெட்ராஸ் டூ தெலங்கானா.. மாநிலங்கள் உருவான வரலாறு.. சுதந்திரத்திற்கு பிறகு நடந்தது இதுதான்!

சுதந்திர தினம் – வாட்ஸ்அப் ஸ்டேடஸ்:

  • 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 1652 மொழிகள், 6 முக்கிய மதங்கள், 100 திருவிழாக்கள் & 1 நாடு! இந்தியனாக இருப்பதில் பெருமை! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
  • சுதந்திர தினம் என்பது நமது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல. வேற்றுமையில் வலிமையையும் ஒற்றுமையையும் கொண்டாடுகிறது. ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!
  • நமது தேசத்தின் மீதான நமது அன்பு எல்லையற்றது. அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். இன்று நாம் இங்கு நிற்கும் போராட்டங்களைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு கற்பிப்போம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
  • பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தை என்றும் மறக்க முடியாது… 78வது சுதந்திர தின வாழ்த்துக்கள்!
  • சுதந்திரம் என்பது பணத்தால் வாங்க முடியாத ஒன்று. அது பல துணிச்சலானவர்களின் போராட்டத்தின் விளைவு. அவர்களை இன்றும் என்றும் போற்றுவோம். 2024 சுதந்திர தின வாழ்த்துக்கள்!
  • 78வது சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகப்பெரிய நிகழ்வைக் கொண்டாடி, அதைப் பாதுகாப்போம் என்று உறுதியளிப்போம்.
  • உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்! நம் தேசத்தை ஒவ்வொரு நாளும் சிறந்த நாடாக மாற்ற கடுமையாக உழைக்க கைகோர்ப்போம்.
  • மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. ஒரு பெரிய நாடாக அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக ஒன்றுபட்டு இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.
  • மூவர்ணக் கொடி எப்பொழுதும் உயரப் பறக்கட்டும், இது இந்தியாவின் உணர்வைக் குறிக்கிறது. 2024 சுதந்திர தின வாழ்த்துக்கள்!
  • இந்த சிறப்பு நாளில், ஒன்றுபட்ட, வலிமையான மற்றும் முற்போக்கான இந்தியாவுக்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்.
  • இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நாம் பெற்ற சுதந்திரத்தை போற்றி, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி உழைப்போம்.
  • இந்த சுதந்திர நாள் உங்கள் இதயங்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நிரப்பட்டும்.
  • சுதந்திரத்தைக் கொண்டாடுவோம், சுதந்திரமாக இருப்பதன் மகிழ்ச்சியைத் தழுவுவோம்.
  • பெருமை, மகிழ்ச்சி மற்றும் சுதந்திர உணர்வால் நிறைந்த நாளாக அமைய வாழ்த்துக்கள்.
  • நமது கொடி பிரதிபலிக்கும் இலட்சியங்களைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்.

Latest News