5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வேட்டுவைத்த சுயேச்சைகள்.. ஹரியானாவில் பாஜக அரசு கவிழ்கிறதா?

ஹரியானாவில் பாஜக அரசுக்கு ஆதரவளித்திருந்த 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

வேட்டுவைத்த சுயேச்சைகள்.. ஹரியானாவில் பாஜக அரசு கவிழ்கிறதா?
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 May 2024 17:35 PM

ஹரியானா சட்டப்பேரவை:

ஹரியானா சட்டப்பேரவை மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்டது. இங்கு தற்போது நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு உள்ளது.

கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களில், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

இதர இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றன. இங்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் கடந்த தேர்தலில் யாருக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை.

பெரும்பான்மை இழந்த பாஜக:

இதனால், பாஜகவும், ஜனநாயக் ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்தன. அப்போது, மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டாததால் பாஜக கூட்டணியில் இருந்து ஜனநாயகக் ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

ஜனநாயகக் ஜனதா கட்சி விலகியதை அடுத்து, முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். அவருக்கு 5 சுயேட்சைகள், லோக்ஹித் கட்சியின் ஒரு எம்எம்ஏ ஆதரவு அளித்தனர்.

Also Read : “ஆப்பிரக்கர்களை போலிருக்கும் தென்னிந்தியர்கள்” காங்கிரஸ் மூத்த தலைவர் மீண்டும் சர்ச்சை!

ஆட்சி கலைப்பு?

இப்படியான நிலையில் தான் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 3 சுயேச்சைகள் அறிவித்துள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக்களான சோம்பிர் சங்வான், ரன்தீர் கோலன், தரம்பால் ஆகியோர் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரஸ் பக்கம் சாய்ந்தனர்.

எனவே, பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துள்ளதால், முதலமைச்சர் பதவியில் இருந்து நயாப் சிங் சைனி விலக வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்திகிறது.  இங்கு அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியில் 30 எம்ஏல்ஏக்கள் உள்ளனர். 3 சுயேட்சைகள் ஆதரவும் உள்ளது. எனவே, பெரும்பான்மை பெற காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இதனால், காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது.

Also Read : “இப்ப ஏன் அதானி பத்தி பேசாம இருக்கீங்க?” பிரதமர் மோடி அட்டாக்!

தக்க வைக்குமா பாஜக:

தற்போது, பாஜக 40 எம்ஏல்ஏக்கள் உள்ளனர். சுயேட்சைகள் இரண்டு பேரும், லோகித் கட்சியின் ஒரு எம்ஏல்ஏவும் உள்ளனர். இதனால் பாஜகவின் பலம் 43ஆக உள்ளது. பெரும்பான்மை பெற 46 தேவைப்படும் நிலையில், 3 பேர் குறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News