5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Neet : நீட்.. நீட்.. பதவியேற்க வந்த கல்வித்துறை அமைச்சர்… கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்!

18வது மக்களவைத் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. பிரதமர் மோடியை தொடர்ந்து, மக்களவை எம்.பிக்கள் பதவியேற்றனர். இதற்கிடையில், கூட்டம் தொடங்கும் முன்பு I.N.D.I.A கூட்டணியில் உள்ள 234 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அங்கிருந்து அணிவகுத்து நாடாளுமன்றத்திற்கு சென்றனர். அங்கு அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியப்படி I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Neet : நீட்.. நீட்.. பதவியேற்க வந்த கல்வித்துறை அமைச்சர்… கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்!
I.N.D.I.A கூட்டணி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Jun 2024 13:32 PM

எதிர்க்கட்சிகள் போராட்டம்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 18வது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. புதிய அரசாங்கம் அமைந்ததைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்பிக்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்.
முதல் ஆளாக பிரதமர் மோடி எம்பி ஆக பதவி ஏற்றத்தை தொடர்ந்து மற்ற மக்களவை எம்.பிக்களும் பதவியேற்று வருகின்றனர். இதற்கிடையில், கூட்டம் தொடங்கும் முன்பு I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த 234 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அங்கிருந்து அணிவகுத்து நாடாளுமன்றத்திற்கு சென்றனர். அங்கு அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியப்படி I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், “பிரதமரும், அமித்ஷாவும் அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை நடக்க விட மாட்டோம். எனவே, அரசியலமைப்பை ஏந்தியபடி எம்பியாக பதவியேற்க போகிறோம். நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால் , எந்த சக்தியாலும் இந்திய அரசியலமைப்பைத் தொட முடியாது என்பதுதான் ” என்றார். நீட் விவகாரமானது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடாளுமன்றத்திலும் அது எதிரொலித்தது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்கும்போது எதிர்க்கட்சிகள் நீட்.. நீட்.. என கோஷம் எழுப்பிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Also Read: நீட் மறுதேர்வை எழுதாத 750 மாணவர்கள்.. அதிர்ச்சி கொடுத்த தேசிய தேர்வு முகமை!

முன்னதாக கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கையை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாட்டின் சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க எதிர்க்கட்சிகள் நாடகம், முழுக்கங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டாம். மக்களுக்கு தேவையானதை நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி. பொறுப்பான எதிர்க்கட்சி தேவை” என்று கூறியிருந்தார்.

நீட் விவகாரத்தை தவிர்த்து இடைக்கால சபாநாயகர் பதவி விவகாரமும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. நீண்ட கால எம்.பியாக பதவி வகித்தவருக்கே இடைக்கால சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்பதே மரபு. இப்படியிருக்க எட்டு முறை எம்.பியாக இருந்த காங்கிரஸை சேர்ந்த கொடிக்குனில் சுரேஷ்க்கு பதிலாக பாஜகவை சேர்ந்த  பர்த்ருஹரி மஹ்தாப்  என்பவருக்கு இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது பெரும் பிரச்னையாக வெடித்தது. இதில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பரஸ்பரமாக விமர்சித்து கொண்டனர்.

Also Read: ”டிராமா வேண்டாம்.. முழக்கங்கள் வேண்டாம்” எதிர்க்கட்சிகளுக்கு மோடி கோரிக்கை!

Latest News