5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரதமர் வேட்பாளர் யார்? ஒன்றுகூடும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.. டெல்லியில் பரபர!

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகி உள்ள நிலையில், டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்ததாக, பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை இழுக்க I.N.D.I.A கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது பற்றியும் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

பிரதமர் வேட்பாளர் யார்? ஒன்றுகூடும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.. டெல்லியில் பரபர!
I.N.D.I.A கூட்டணி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Jun 2024 08:57 AM

ஒன்றுகூடும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவது ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவின் பெருந்தலைகள் கூறி வந்த நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. அதேபோல, I.N.D.I.A கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. அரசியில் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தி பேசும் மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணி கணிசமான வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் I.N.D.I.A கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளது.

Also Read: தனிப் பெரும்பான்மையை தவறவிட்ட பாஜக.. மீண்டும் பிரதமராவாரா மோடி?

அடுத்து நடக்கப்போவது என்ன?

இருப்பினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்த என்ன என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அவர்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.  இப்படியான சூழலில், டெல்லியில் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை இழுக்க I.N.D.I.A கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது பற்றியும் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஏனென்றால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சி, 16 மக்களவைத் தொகுதிகளையும் வென்றுள்ளது. I.N.D.I.A கூட்டணிஆட்சி அமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தயார் என காங்கிரஸ் கூறியிருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பீகாரில் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமார் 14 தொகுதிகளை வென்றுள்ளார். அவர் தேர்தலக்கு முன்பு தான் பாஜக கூட்டணிக்கு சென்றார் என்பதால் மீண்டும் I.N.D.I.A கூட்டணிக்கு வருமாறு நிதீஷ்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால், தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Also Read: பிரதமராகிறீர்களா? கருணாநிதி ஸ்டைலில் பதில் அளித்த ஸ்டாலின்!

Latest News