48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு.. ஸ்கெட்ச் போடும் I.N.D.I.A கூட்டணி - Tamil News | | TV9 Tamil

48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு.. ஸ்கெட்ச் போடும் I.N.D.I.A கூட்டணி

48 மணி நேரத்தில் I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 2004ல் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பெயரை 3 நாட்களில் அறிவித்தோம். இம்முறை 3 நாட்கள் கூட ஆகாது.  இந்த முறை 48 மணி நேரம் கூட ஆகாது என்று நினைக்கிறேன்" என்றார்.

48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு.. ஸ்கெட்ச் போடும் I.N.D.I.A கூட்டணி

ஜெய்ராம் ரமேஷ்

Updated On: 

30 May 2024 11:55 AM

பிரதமர் வேட்பாளர் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இதுவரை 6 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவானது வரும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.இந்த முறை பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதில் பாஜகவில் மோடி தான் பிரதமர் வேட்பாளராக இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக பாஜகவினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இப்படியான சூழலில், 48 மணி நேரத்தில் I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Also Read: தென்மேற்கு பருவமழை இன்று தொடக்கம்.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா?

“48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு”

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”எண்ணிக்கைக்குள் நுழைய நான் விரும்பவில்லை. நாங்கள் பெரும்பான்மையைப் பெறுவோம். 273 இடங்களில் வெற்றி என்பது தெளிவாக உள்ளது. ஆனால் தீர்க்கமானது அல்ல. நான் தீர்க்கமானதாகச் சொன்னால் 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். 2004ல் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பெயரை 3 நாட்களில் அறிவித்தோம். இம்முறை 3 நாட்கள் கூட ஆகாது.  இந்த முறை 48 மணி நேரம் கூட ஆகாது என்று நினைக்கிறேன்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்போம். அதிக இடங்களைப் பெற்ற கட்சியில் இருந்து ஒருவர் பிரதமர் வேட்பாளராக இருப்பார். முதல் இரண்டு கட்டங்களுக்குப் பிறகு, மாற்றத்தின் காற்று வீசுகிறது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. தெற்கில் பாஜக அழிக்கப்படப் போகிறது. வடக்கில் அது பாதியாகக் குறைக்கப் போகிறது. 2004-ல் கிடைத்த பெரும்பான்மையை இந்தியா கூட்டணி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மணிசங்கர் அய்யர் யார்? அவர் அதிகாரி இல்லை, முன்னாள் எம்.பி., முன்னாள் அமைச்சர். அவர் தனிப்பட்ட முறையில் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார். இதை  பற்றி பாஜக  பேசி வருகிறது. எங்களுக்கு சம்மந்தம் இல்லை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

Also Read: “தியானம் செய்ய கேமரா எதுக்கு”? மோடியின் குமரி விசிட் குறித்து மம்தா கிண்டல்!

 

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?