5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

India Divorce Rate: இந்தியாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்.. காரணம் என்ன? ஓர் அலசல்..

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். திருமணம் என்பது ஆண் பெண் மட்டுமல்லாமல் இரண்டு குடும்பங்கள் இணையும் ஒரு அற்புதமான நிகழ்வு. நம் முன்னோர்கள் திருமணத்தை மிகவும் புனிதமாக கருதினர். ஆனால் இன்று திருமணம் மீது நமக்கு இருக்கும் பார்வை சற்று மாறுபட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். பெண் சுதந்திரம், பெண்ணியம் என அவர்களது சுய மரியாதை சமூகத்தில் ஆணாதிக்கம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் உள்ளது.

India Divorce Rate: இந்தியாவில்  அதிகரிக்கும் விவாகரத்துகள்.. காரணம் என்ன? ஓர் அலசல்..
மாதிரி புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 19 Jul 2024 20:25 PM

இந்தியாவில் விவாகரத்து விகிதம்: இன்றைய காலக்கட்டத்தில் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகளை விட அதிகமாக காணப்படுவது விவாகரத்து வழக்குகள். திருமணம் எவ்வளவு வேகமாக நடக்கிறதோ அதே வேகத்தில் விவாகரத்தும் நடக்கிறது. பேசினால் தீராத பிரச்சனை இல்லை. ஆனால் இன்று யாருக்கும் அந்த அளவு பொருமை இல்லை. இது தான் நிதர்சனம். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இன்றைய தம்பதியினர் விவாகரத்தை நோக்கி நகர்கின்றனர். காரணம் கேட்டால் வேடிக்கையாக இருக்கும், ஆனால் அவர்களுக்கு அது ஈகோ பிரச்சனையாக இருக்கும். நீயா நானா என்ற போட்டி இருந்துக்கொண்டே இருக்கும். இப்படியான சூழலில் இந்தியாவில் விவாகரத்து விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிக விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியலில் கடந்தாண்டு வரை இந்தியா இடம்பெறாத நிலையில் இந்த ஆண்டு இந்தியா அந்த பட்டியலில் நுழைந்துள்ளது. பட்டியலில் கடைசி இடம் என்றாலும், இந்தியாவை பொறுத்தவரை அந்த சதவீதம் அதிகம் தான்.

விவாகரத்தில் முடியும் திருமணங்கள்:

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். திருமணம் என்பது ஆண் பெண் மட்டுமல்லாமல் இரண்டு குடும்பங்கள் இணையும் ஒரு அற்புதமான நிகழ்வு. நம் முன்னோர்கள் திருமணத்தை மிகவும் புனிதமாக கருதினர். ஆனால் இன்று திருமணம் மீது நமக்கு இருக்கும் பார்வை சற்று மாறுபட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். பெண் சுதந்திரம், பெண்ணியம் என அவர்களது சுய மரியாதை சமூகத்தில் ஆணாதிக்கம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் உள்ளது. அதேபோல் திருமணத்தில் ஆணும் பெண்ணும் இணையும் போது இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து இருக்க வேண்டும். இது ஆண் பெண் இரு தரப்பினருக்கும் பொருந்தும்.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் யாருக்கும் அந்த எண்ணம் இல்லை. ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எப்படி இருக்கிறதோ அதேபோல் கெட்ட விஷயங்களும் இருக்கிறது. வற்றை சரியாக கையாண்டு கடந்து வருபவர்களின் திருமணம் நிலைக்கிறது, கடக்க இயலாதவர்களின் வாழ்க்கை விவாகரத்தை நோக்கி நகர்கிறது. யாரையும் சகித்துக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற மனப்பான்மை இன்றைய தலைமுறையினர் இடையே அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க: ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 31 ஆம் தேதி வரை காவல்..

இந்தியாவில் அதிகரிக்கும் விவகரத்து வழக்குகள்:

இது ஒரு பக்கம் இருக்க, திருமணம், குழந்தை என்ற கமிட்மெண்டுகளில் ஈடுபட இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை. இது போன்ற காரணங்களினால் விவாகரத்துகளும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில், அதிகமான விவாகரத்துகள் பதிவாகும் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வரை இந்த பட்டியலில் இந்தியா இடம்பெறாத நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் விவாகரத்து விகிதம் 1% ஆக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் விவாகரத்து விகிதத்தில் முதல் இடம் வகித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 18.7% அதனை தொடர்ந்து கர்நாடகாவில் 11.7%, உத்திர பிரதேசத்தில் 8.8%, மேற்கு வங்கத்தில் 8.2%, டெல்லியில் 7.7%, தமிழ்நாட்டில் 7.1%, தெலங்கானாவில் 6.7%, கேரளாவில் 6.3% என விவாகரத்து விகிதங்கள் பதிவாகியுள்ளது.

என்ன காரணம்?

நம் முன்னோர்கள் காலத்தில் விவாகரத்து என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால் இன்று அதி மிகவும் எளிதாகிவிட்டது. திருமணமானவர்கள் விவாகரத்து வழக்கை தொடுக்கும் போது நீதிமன்றம் தரப்பில் முதலில் 6 மாதம் கால அவகாசம், பின் கவுன்சிலிங் என பல்வேறு கட்டங்களாக நகர்கிறது. மேலும் இன்றைய தலைமுறையினரிடையே விவாகரத்தின் மீது இருக்கும் கண்ணோட்டம் அப்படியே மாறியுள்ளது. கமிட்மெண்ட், ரிலேஷன்ஷிப் தாண்டி விவாகரத்து மிகவும் ஃபான்சியாகிவிட்டது. விவாகரத்தை இன்றைய தலைமுறையினர் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர். நண்பர்கள், சுற்றுசூழல், பழக்க வழக்கம், உறவினர்கள் என அனைத்துமே ஒரு தம்பதியினரின் பிரிவுக்கு காரணமாக உள்ளது.

மேலும் படிக்க: சம்பளம் பெறுபவர்கள், தனிப்பட்ட வரி செலுத்துவோர் என்ன எதிர்பார்க்கலாம்?

Latest News