Monkey Pox: இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு? இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை போங்க!

குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு அந்த நோய்க்கான அறிகுறி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்பை உலகளாவிய சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது.

Monkey Pox: இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு? இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை போங்க!

குரங்கு அம்மை

Updated On: 

08 Sep 2024 19:27 PM

குரங்கு அம்மை நோய்: குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு அந்த நோய்க்கான அறிகுறி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்பை உலகளாவிய சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது. இப்படியான சூழலில், இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவருக்கு குரங்கு அம்மை நோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை கூறுகையில், “இது விவகாரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், நாட்டில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் அந்த நபருடன் தொடர்புடைய நபர்களை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (NCDC) நடத்திய முந்தைய ஆயிவின்படி, இந்த புதிய தொற்று பாதிப்பு ஒத்துப்போகிறது என்று கூறி நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Also Read: இனி இந்த ஆவணம் இருந்தால் தான் ஆதார் கார்டு.. வந்தது மேஜர் அறிவிப்பு!

எந்தவித கவலையும் மக்கள் அடைய தேவையில்லை.   நாடு முழுமையாக தயாராக உள்ளளது. இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயணம் தொடர்பான வழக்கை சமாளிக்க நாடு முழுமையாக தயாராக உள்ளது. சாத்தியமான ஆபத்துகளை எதிர்கொள்ளவும் தயாராக” இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய்:

குரங்கம்மை வைரஸ் க்ளாட் 1 மற்றும் க்ளாட் 2 என வகைகளை கொண்டுள்ளது. இதில் க்ளாட் 2ஐக் காட்டிலும் க்ளாட் ஒன்று அதிகமாக உயிர்பலியை ஏற்படுத்த கூடிய வீரியம் கொண்டது. தற்போது வேகமாக பரவி வருவது க்ளாட் 1 வகை வைரஸ். இது ஆப்ரிக்காவை தாண்டி உலக நாடுகளில் பரவத் தொடங்கினால் உயிரிழப்பு எண்ணிக்கை பெரிய அளவில் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அறிகுறிகள்:

குரங்கம்மை பாதித்தால் காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி ஏற்படும். காய்ச்சலைத் தொடர்ந்து முதலில் முகத்திலும், உடலிலும் தடிப்புகள் ஏற்படும். இந்த தடிப்புகள் அரிப்பும் வலியையும் ஏற்படுத்தும். சிறுசிறு கொப்புளங்களாக மாறி இறுதியில் உதிர்ந்துவிடும். இந்த தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில் , காயங்கள் உடல் முழுவதும் தோன்றும். குறிப்பாக வாய், கண்கள், பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம்.

Also Read: ஆந்திராவை அதிரவைத்த சீரியல் கில்லர்கள்.. சயனைடு கலந்து 4 பேரை கொன்ற பெண்கள்.. பகீர் பின்னணி!

தப்பிப்பது எப்படி?

கொரோனா காலத்தில் கூறிய அதே தற்காப்பு நடவடிக்கையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைகள் கழுவுதல், சுத்தமாக இருத்தல் மூலம் குரங்கம்மை நோயில் இருந்து தப்பிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனென்றால், இந்த நோய் சில நேரத்தில் உயிரை பறிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் குழந்தைகளுக்கு அதிக அச்சறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் அவர்களுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!