5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IT Jobs: இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஐடி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

2024-25ஆம் ஆண்டில் ஐடி துறையில் ஒரு லட்சம் பேரை பணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐடி துறையின் வலுவான வளர்ச்சியால் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அந்தந்த நிறுவனங்கள் வெளியிட உள்ளன.  குறிப்பாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு லட்சம் பேர் வரை வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

IT Jobs: இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஐடி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை.. மிஸ் பண்ணாதீங்க!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Jul 2024 17:58 PM

ஒரு லட்சம் பேருக்கு வேலை: 2024-25ஆம் ஆண்டில் ஐடி துறையில் ஒரு லட்சம் பேரை பணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐடி துறையின் வலுவான வளர்ச்சியால் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அந்தந்த நிறுவனங்கள் வெளியிட உள்ளன.  குறிப்பாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு லட்சம் பேர் வரை வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் (Tata Consulting Service) நடப்பு ஆண்டில் சுமார் 90,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் புதிதானவர்களை (Freshers) வேலைக்கு அமர்த்த உள்ளதாக தெரிகிறது.  டிசிஎஸ் நிறுவனம் முதல் காலாண்டில் 5,442 பேரை வேலைக்கு எடுத்தது. இந்த நிறுவனத்தில் தற்போது 6.06 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி கூறுகையில், ” அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதே முக்கியம். நடப்பு காலாண்டில் சுமார் 90,000 பேரை பணிக்கு அமர்த்த உள்ளோம்” என்றார்.

Also Read: விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக குத்திக்கொலை.. பெங்களூருவை அதிர வைத்த கிரைம்!

அதேபோல,  நடப்பாண்டில் இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனம் 15,000 முதல் 20,000 பேரை பணிக்கு அமர்த்த உள்ளதாக திட்டமிட்டிருக்கிறது. நடப்பு காலாண்டில் 11,900 பேரை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிக்கு அமர்த்தியது. கடந்த 2023ஆம் ஆண்டில் 50,000க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில், அதில் 76 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 20,000 பேர் வரை வேலைக்கு அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து இன்ஃபேசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூறுகையில், “நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்து இந்தாண்டு 20,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளோம்” என்றார். மேலும், எச்சிஎல் (HCL) நிறுவனத்தில் இந்தாண்டு 10,000க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 8 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்திய நிலையில், இந்தாண்டு 10,000 பேர் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்தாண்டில் விப்ரோ (Wipro) நிறுவனமும் 10,000 முதல் 12,000 வரை வேலைக்கு அமர்த்த உள்ளது. நடப்பு நிதியாண்டில் புதியவர்கள் 6 ஆயிரம் பேரை பணிக்கு எடுத்த நிலையில், இந்தாண்டு 12,000 புதியவர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. எனவே, இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”பாகிஸ்தான் தங்கள் தோல்வியில் இருந்து எதுவும் கற்கவில்லை” – கார்கில் போர் வெற்றி தினத்தில் பிரதமர் மோடி..

Latest News