Diwali Celebration : எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்.. சீன ராணுவத்தினருக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்! - Tamil News | Indian military gave sweets to china military to celebrate Diwali | TV9 Tamil

Diwali Celebration : எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்.. சீன ராணுவத்தினருக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்!

India - China Border | கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. ஆனால், சீன ராணுவத்தின் இந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. இதன் காரணமாக சீன மற்றும் இந்திய வீரர்கள் எல்லையில் மோதிக்கொண்டனர்.

Diwali Celebration : எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்.. சீன ராணுவத்தினருக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்!

எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்

Published: 

31 Oct 2024 17:58 PM

நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா – சீனா எல்லையிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்திய வீரர்கள் சீன ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் நின்று இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Watch Video: டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வ நிகழ்வு.. முதல் பந்திலேயே 10 ரன்கள்.. வங்கதேசத்திற்கு அடித்த ஆஃபர்!

கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை இன்றுதான் என்றாலும் கடந்த ஒரு மாத காலமாகவே மக்கள் பண்டிகைக்கு தயாராகி வந்தனர். புத்தாடை வாங்குவது, இனிப்புகள் வாங்குவது, பட்டாசு வாங்குவது என கடை வீதிகளில் மக்கள் கூட்டங்கள் அலைமோதியது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக பேருந்து நிலையங்கள், கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள், ரயில்கள் என அரசு சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

இதையும் படிங்க : Viral Video : “Alexa Launch the Rocket”.. நவீன முறையில் பட்டாசு வெடித்த இளைஞர்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

அதன் தொடர்ச்சியாக இன்று மக்கள் நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். ஒட்டுமொத்த நாடே தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா – சீனா எல்லையிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. எப்போதும் பதட்டமான எல்லையில் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரும்.. பிரதமர் மோடி திட்டவட்டம்!

எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. ஆனால், சீன ராணுவத்தின் இந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. இதன் காரணமாக சீன மற்றும் இந்திய வீரர்கள் எல்லையில் மோதிக்கொண்டனர். இதன் காரணமாக எல்லையில் பதற்றம் காணப்பட்டதால் அங்கு இரண்டு நாடுகளின் ராணு படைகளும் குவிக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்த விவகாரத்தில் சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert : கொட்டித் தீர்க்கும் கனமழை.. பட்டாசு வெடிக்க முடியாமல் தவிக்கும் மக்கள்.. இன்றைய மழை நிலவரம் என்ன?

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – படைகளை விலக்கிக்கொண்ட நாடுகள்

இரண்டு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், இரு நாட்டு எல்லைகளில் இருந்தும் ராணுவ படைகள் விளக்கிக்கொள்ளப்பட்டன. மேலும் இது குறித்து சீன வெளியுறுவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். அதுமட்டுமன்றி, உடன்படிக்கையின் படி இரண்டு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : Share Market : தீபாவளியில் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்

இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த எல்லை பிரச்னை முடிவுக்கு வந்ததை கொண்டாடும் விதமாகவும், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாகவும் இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்று இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 ஆண்டுக்கான FD - தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்கள்!
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?
மஸ்காரா பயன்படுத்தும் நபரா நீங்கள்? - ஜாக்கிரதை!
செரிமானத்திற்கு உதவும் சிறந்த உணவு வகைகள்!