PM Modi Birthday : பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து! - Tamil News | Indian Prime Minister Narendra Modi celebrating his 74th Birthday Today | TV9 Tamil

PM Modi Birthday : பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து!

Updated On: 

17 Sep 2024 10:52 AM

Birthday Wishes | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 3வது முறையாக இந்திய பிரதமராக பதவி வகிக்கும் மோடிக்கு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PM Modi Birthday : பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் மோடி (Photo Credit : PTI)

Follow Us On

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 3வது முறையாக இந்திய பிரதமராக பதவி வகிக்கும் மோடிக்கு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியில் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் யார் யார், என்ன வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

திரௌபதி முர்மு வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாத்துக்கள். உங்களது தலைமை பண்பால் நாட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. உங்களது நீண்ட ஆயுளுக்காகவும், அரோக்கியமான உடல் நலத்திற்காகவும் நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அமித்ஷா வாழ்த்து

உலகின் பிரபலமான பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது அயராத உழைப்பு மற்றும் முயற்சியால் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து இந்த பணிகளை செய்ய உங்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தலைவர்களின் வாழ்த்துக்கள் ஒருபுறம் இருக்க பாஜக தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இலவச உணவு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version