Indo China Border: இந்தியா – சீனா எல்லை விவகாரம்.. டெப்சாங்கை தொடர்ந்து யாங்சேயிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.. - Tamil News | indo china border issue arunachal pradesh yangste lac agreement signed between both countries | TV9 Tamil

Indo China Border: இந்தியா – சீனா எல்லை விவகாரம்.. டெப்சாங்கை தொடர்ந்து யாங்சேயிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்..

சீனாவுடனான எல்லை தகராறு குறித்து வெளியுறவு அமைச்சகம் முக்கிய தகவல்களை தெரிவித்திருந்தார். வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி முக்கிய கூறுகையில், கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த சில வாரங்களாக தொடர்பில் இருப்பதாகவும், எல்ஏசியில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Indo China Border: இந்தியா - சீனா எல்லை விவகாரம்.. டெப்சாங்கை தொடர்ந்து யாங்சேயிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்..

கோப்பு புகைப்படம்

Published: 

26 Oct 2024 13:08 PM

இந்தியாவும் சீனாவும் உலகின் மிக நீளமான மற்றும் சர்ச்சைக்குரிய எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன, இது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அல்லது LAC என்று அழைக்கப்படுகிறது. இது 3488 கி.மீ நீளமுள்ள எல்லையாகும், இது இந்தியா மற்றும் சீனாவின் எல்லையை கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது. இந்தியாவும் சீனாவும் லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான பல பகுதிகளில் வெவ்வேறு உரிமைகோரல்களை முன்வைக்கும் நீண்ட கோடு இது, மேலும் இது மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால் தற்போது சில பகுதிகள் மற்றும் அங்கு ரோந்து செல்வது தொடர்பாக பரஸ்பர ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

எல்லையில் சீன ரோந்து பணி:

ராணுவ வட்டாரங்களின்படி, சில பகுதிகள் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது, மேலும் ரோந்துப்பணி மீண்டும் தொடங்கப்படும், இதில் இப்போது அருணாச்சல பிரதேசத்தின் யாங்ட்சேயும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சீன வீரர்கள் ரோந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முன்பு போலவே, சீன வீரர்கள் யாங்சியில் ரோந்து செல்ல முடியும் மற்றும் ரோந்துப் பணியின் போது ஒருவருக்கொருவர் செயல்பாடுகள் தடுக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ ஆதாரங்களின்படி, தவாங்கில் உள்ள யாங்சே இரு நாடுகளுக்கும் இடையில் அடையாளம் காணப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாகும், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்கு PLA ரோந்து வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் இந்திய வீரர்கள் அடிக்கடி சீன பிஎல்ஏவுடன் நேருக்கு நேர் வந்து மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், பிஎல்ஏ-க்கும் இடையே சிறு மோதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:  பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. ரோஹித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..

ஒவ்வொரு ஆண்டும் கோடை மாதங்களில் சில மோதல்களும் பதிவாகி வருகின்றன. டிசம்பர் 9, 2022 அன்று, இந்திய வீரர்களும் PLA களும் இங்கு மோதினர். இதனால் சீனர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஜூன் 15, 2020க்குப் பிறகு சீன பிஎல்ஏவுடன் மோதல் ஏற்பட்ட பிறகு இதுபோன்ற நடக்கும் முதல் சம்பவம் இதுவாகும்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள LAC இல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான தொடர்பைத் தொடங்கியது. கொட்டகைகள், கூடாரங்கள் போன்ற தற்காலிக கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. புதிய ஒப்பந்தங்கள் டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் மட்டுமே பொருந்தும். அக்டோபர் 28-29க்குள் இரு நாட்டு வீரர்களும் இங்கிருந்து முழுமையாக பின்வாங்குவார்கள். அதன் பிறகு ரோந்து பணி தொடங்கும்.

மேலும் படிக்க: கால்சியம், வைட்டமின் டி3 உள்ளிட்ட 49 மாத்திரைகள் தர சோதனையில் தோல்வி.. 4 மருந்துகள் போலி என அறிவிப்பு..

முன்னதாக, சீனாவுடனான எல்லை தகராறு குறித்து வெளியுறவு அமைச்சகம் முக்கிய தகவல்களை தெரிவித்திருந்தார். வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி முக்கிய கூறுகையில், கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த சில வாரங்களாக தொடர்பில் இருப்பதாகவும், எல்ஏசியில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ரோந்து பணிக்கு உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைந்துள்ளது. டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் விலகல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது இரு நாட்டு ராணுவங்களும் பழைய நிலைகளுக்கு செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?