Influencer Died : ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

Aanvi Kamdar | மும்பையில் பிரபல இன்ஃப்ளூயன்சர் ஆக வலம் வந்தவர் ஆன்வி கம்தர். இவர் வித்தியாசமான இடங்களுக்கு சென்று அவற்றை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த ஜூலை 16 ஆம் தேதி தனது 6 நண்பர்களுடன் சுற்றுலா சென்ற ஆன்வி, 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

Influencer Died : ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

ஆன்வி

Updated On: 

18 Jul 2024 15:37 PM

அதிர்ச்சி சம்பவம் : சமூக ஊடகங்களின் மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்களின் வாழ்நாளை வீடியோ பதிவு செய்து பதிவிடுவது, நடனமாடுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது என அனைத்தையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு வீடியோ பதிவிடும் நபர்களை பலர் பின்தொடர்வது மட்டுமன்றி, அதில் வருமானமும் ஈட்டுகின்றனர். இவ்வாறு வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவோர்கள் இன்ஃப்ளூயன்சர் என அழைக்கப்படுகின்றனர். அத்தகைய இன்ஃப்ளூயன்சர் ஒருவர் ஒரு வீடியோவிற்காக உயிரை பரிகொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

300 அடி பள்ளத்தில் விழுந்த உயிரிழந்த இன்ஃப்ளூயன்சர்

மும்பையில் பிரபல இன்ஃப்ளூயன்சர் ஆக வலம் வந்தவர் ஆன்வி கம்தர். இவர் வித்தியாசமான இடங்களுக்கு சென்று அவற்றை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த ஜூலை 16 ஆம் தேதி தனது 6 நண்பர்களுடன் சுற்றுலா சென்ற ஆன்வி, 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற ஆன்வி

ரெய்காட் மாவட்டம், மான் கிராமத்தில் உள்ள கும்பே நீர்விழ்சிக்கு ஆன்வி தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு நீர்வீழ்ச்சியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அவர், கால் இடறி 300 அடி பள்ளத்தில் விழுந்தார். ஆன்வி பள்ளத்தில் விழுந்த உடனே அவரது நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி உள்ளூர் மீட்பு குழுவினரையும் அவர்கள் வரவழைத்துள்ளனர். ஆனால் அங்கு தொடர்ந்து மழை பொழிந்துக்கொண்டிருந்ததால் ஆவனியை தேடு பணியில் தொய்வு ஏற்பட்டது. பிறகு 24 மணி நேரம் கழித்து வானிலை சீரானதும் பள்ளத்தில் இறங்கி தேடுதல் பணியை மேற்கொண்ட மீடு குழுவினர், உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த ஆன்வியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆன்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : போட்டோஷூட்டுக்கு நடுவே வந்த ரயில்.. 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி.. அடுத்து நடந்தது என்ன?

ரயில் பாலத்தில் இருந்து குதித்த தம்பதி

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் பலியை சேர்ந்த புதுமன தம்பதியினர், கோர்மகட் ரயில் பாலத்தின் மீது நின்று போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாதையில் ரயில் வந்துள்ளதுள்ளது. இதனால் செய்வது அறியாமல் தவித்த தம்பதி, 90 அடி ரயில் பாலத்தின் மீது இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.
நடிகை சோபிதா துலிபாலாவின் சினிமா பயணம்..!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...