பயிர்க்கழிவுகள் எரித்தால் ரூ. 30,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் – மத்திய அரசு அதிரடி..

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை காலம் முடிந்த பின் பயிர்க்கழிவுகள் எரிப்பது வழக்கம். ஆனால் இதனை எரிக்காமல் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் சமீபத்தில் கூட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் பயிர்க்கழிவுகள் அல்லது மரக்கழிவுகள் எரித்தால் அதற்கான அபராதம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

பயிர்க்கழிவுகள் எரித்தால் ரூ. 30,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் - மத்திய அரசு அதிரடி..

கோப்பு புகைப்படம்

Updated On: 

07 Nov 2024 15:29 PM

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியதை அடுத்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று விவசாயிகளின் பயிர்க்கழிவுகள் அல்லது மரக்கழிவுகள் எரிக்கும் அபராதத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குளிர் காலத்தில் இது மக்கள் சுவாசிக்க தகுதியற்றதாக மாறுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகள் மூலம் வெளியேறும் தூசு, அண்டை மாநில விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவை இந்த காற்று மாசுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தரப்பில் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும், மக்கள் அதனை முறையாக பின்பற்றுவது இல்லை என் தெரிய வந்துள்ளது.

இரட்டிப்பான அபராதம்:

குறிப்பாக அண்டை மாநிலமான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை காலம் முடிந்த பின் பயிர்க்கழிவுகள் எரிப்பது வழக்கம். ஆனால் இதனை எரிக்காமல் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் சமீபத்தில் கூட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் பயிர்க்கழிவுகள் அல்லது மரக்கழிவுகள் எரித்தால் அதற்கான அபராதம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி இப்போது இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5,000 வழங்க வேண்டும். அதேசமயம், இரண்டு ஏக்கருக்கு மேல், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு ரூ.30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read: உங்களுக்கு முதலில் தெரிந்தது எது?.. முதியவரா அல்லது குடையா.. உங்களது பண்புகள் இவைதான்!

தலைநகரைச் சுற்றியுள்ள காற்றுத் தர மேலாண்மை ஆணையம், 2024 இன் திருத்தப்பட்ட விதிகள் இப்போது நடைமுறைக்கு வருகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு இந்த விதிகள் கட்டாயமாக இருக்கும். புதிய விதிகளின்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் அலுவலகங்களில் புகார்களை தாக்கல் செய்வதற்கான நடைமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான புகார்களின் விசாரணை மற்றும் தீர்வும் இதில் அடங்கும்.

நீதிமன்றம் சொல்வது என்ன?

நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நவம்பர் 14 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு முன்பும், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் (இபிஏ) விதிகளை உருவாக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நியமிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியது. கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வற்புறுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி நடந்த விசாரணையில், அரியானா அரசின் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் திருப்தி அடையவில்லை.

Also Read: மூடப்படும் ஏடிஎம்கள்.. பட்ஜெட் போடும் வங்கிகள்.. UPI ஏற்படுத்தும் மாற்றங்கள்.. முழு விவரம்!

நீதிபதி அபய் எஸ். ஓகா, நீதிபதி ஏ. அமானுல்லா மற்றும் நீதிபதி ஏ.ஜி. ஆகியோர் அடங்கிய அமர்வு, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் வயல்களில் வைக்கோல் எரிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளது. சட்டத்தை அமல்படுத்துவதில் அரசுகளுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், ஒரு வழக்கின் முன்னோடியாவது இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மாசு இல்லாத சூழலில் வாழ்வது குடிமக்களின் அடிப்படை உரிமை என்பதை மத்திய, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளுக்கு நினைவூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மாசுபட்ட சூழலில் வாழ்வது என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?