இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்.. பரிதாப பலி! - Tamil News | | TV9 Tamil

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்.. பரிதாப பலி!

Updated On: 

22 May 2024 13:14 PM

இஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் இளைஞர் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரியில் குதித்த தஜிப் தண்ணீரில் மூழ்கியுள்ளார். பின்னர், தஜிப் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ஏரிக்குள் இறங்கி தஜிப்பை தேடி உள்ளனர். அப்போது அவர் ஏரியின் மறு கரையில் சடலமாக கிடந்துள்ளார்.

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்.. பரிதாப பலி!
Follow Us On

ஜார்க்கண்டில் அதிர்ச்சி: இன்றைய காலத்து இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் லைக் பெறுவதற்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்களை செய்து வருகின்றனர். வெறும் லைக் மற்றும ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது, இஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் இளைஞர் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஜிப். இவருக்கு வயது 18 ஆகும். இவர் தனது நண்பர்களுடன் நேற்று மாலை ஜிர்வபரியில் உள்ள குவாரியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் லைக்காக பறிபோன உயிர்:

அப்போது, இவரது சில நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக இளைஞர் தஜிப் 100 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்துள்ளார். தஜிப் ஏரிக்குள் குதிப்பதை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். ஏரியில் குதித்த தஜிப் தண்ணீரில் மூழ்கியுள்ளார். பின்னர், தஜிப் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ஏரிக்குள் இறங்கி தஜிப்பை தேடி உள்ளனர்.

Also Read: “நான் மனிதப் பிறவியே அல்ல.. இந்த பூமிக்கு என்னை அனுப்பியது கடவுள்தான்” புதுக்கதை சொல்லும் பிரதமர் மோடி!

அப்போது அவர் ஏரியின் மறு கரையில் சடலமாக கிடந்துள்ளார். எனவே, ஏரிக்குள் தஜிப் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் இளைஞரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், 100 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்த தஜிப் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தங்களது சுஸுகி பிரெஸ்ஸாவில் மும்பைக்கு 5 இளைஞர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். காரில் பாட்டி பாடல்கள் கேட்டுக்கொண்டு 5 பேரும் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணிப்பதை இன்ஸ்டாகிராம் லைவில் காண்பித்தனர். அவர்கள் சுமார் 160 கிமீ வேகத்தில் சென்ற அதை இன்ஸ்டாகிராமில் லைவ் செய்திருக்கிறார். சாலைகளில் வேகமாக பல வாகனங்களை முந்திக் கொண்ட கலாட்டா செய்து செல்கின்றனர்.

அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. அகமதாபாத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் குஜராத்தில் உள்ள அடாஸ் என்ற பகுதியில் ஒரு திருப்பத்தில் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : ”பாஜக ஆட்சி அமைக்கலன்னா அமித்ஷாவுக்கு சந்தோஷம்” கொளுத்தி போட்ட ப.சிதம்பரம்!

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version