Watch Video: ரீல்ஸ் மோகம்.. கடலில் சிக்கிய மஹிந்திரா தார்.. வைரல் வீடியோ..!
மக்கள் அதிகம் இருக்கும் கடற்கரையில் மாணவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றபோது, ஸ்டண்ட் செய்து ரீல்ஸ் எடுத்தப்போது இரண்டு மஹிந்திரா தார் கார்கள் கடலுக்குள் சிக்கிய சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. மாணவர்கள் முயற்சி செய்தும் காரை வெளியே எடுக்க முடியாமல் திணறினர். இதனால் அக்கம்பக்கத்தில் இருக்கும் மீனவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். மீனவர்கள் அந்த இரண்டு கார்களையும் கையிறு கட்டி கடற்கரைக்கு இழுத்து வந்தனர். கரைக்கு கொண்டு வரப்பட்ட கார்களில் ஒரு கார் ஸ்டார்ட் ஆன நிலையில் மற்றொரு கார் ஸ்டார்ட் ஆகமல் எஞ்ஜின் பழுதானது. பின்னர் அந்த காரை டொ செய்து மிட்டனர்.
வைரல் வீடியோ: குஜராத்தின் முந்த்ரா நகரத்தில் உள்ள பத்ரேஷ்வரைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் ஒரு வைரலான வீடியோவை உருவாக்கும் முயற்சியில் தங்கள் மஹிந்திரா தார் SUV களை கடலுக்குள் ஓட்டிச் சென்று சட்ட சிக்கலில் சிக்கியுள்ளனர். கரண் சோரத்தியா (23) மற்றும் பரேஷ் சோரத்தியா (23) ஆகியோரின் வாகனங்கள் நீரில் சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து முந்த்ரா கடல் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அதில், பத்ரேஷ்வர் கடற்கரையில் இரண்டு தார் எஸ்யூவிகள் மூழ்கியதைக் காட்டுகிறது. ஒரு வாகனத்தின் டயர்கள் நீருக்கடியில் இருந்த நிலையில், மற்றொன்று கடலில் பாதியளவு மூழ்கியது. நீரில் மூழ்கிய காரை தண்ணீரில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இருவர் முயற்சிப்பதையும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
For reel mania, two youths drove two Thar cars into deep waters at Mundra beach, Kutch.
High tide almost engulfed the vehicles, trapping them.
With villagers’ help, Thars were retrieved, but one Jeep’s engine failed.pic.twitter.com/C5Ft67d876
— Kumar Manish (@kumarmanish9) June 23, 2024
முந்த்ரா கடற்கரை காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் நரேந்திர ஜடேஜாவின் கூற்றுப்படி, மக்கள் அதிகம் இருக்கும் கடற்கரையில் மாணவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றபோது, ஸ்டண்ட் செய்து, இந்த சம்பவம் நிகழ்ந்தது. சமூக ஊடக தளங்களில் வைரலான இந்த வீடியோ, 15 நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
Also Read: நாடாளுமன்றத்தில் எதிரொலித்த உதயநிதி பெயர்.. தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்!
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாலும், கார் நீரில் மூழ்கியதாலும் மாணவர்களால் காரை வெளியே எடுக்க முடியாமல் திணறினர். இதனால் அக்கம்பக்கத்தில் இருக்கும் மீனவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். மீனவர்கள் அந்த இரண்டு கார்களையும் கையிறு கட்டி கடற்கரைக்கு இழுத்து வந்தனர். கரைக்கு கொண்டு வரப்பட்ட கார்களில் ஒரு கார் ஸ்டார்ட் ஆன நிலையில் மற்றொரு கார் ஸ்டார்ட் ஆகமல் எஞ்ஜின் பழுதானது. பின்னர் அந்த காரை டொ செய்து மிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கரண் மற்றும் பரேஷ் ஆகிய இருவர் மீதும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். சமூக ஊடகங்களுக்காக ஆபத்தான ஸ்டண்ட்களை முயற்சிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.