International Yoga Day: சர்வதேச யோகா தினம்.. ராணுவ வீரர்கள் முதல் மாணவர்கள் வரை யோகா செய்து அசத்தல்..
Yoga Day: இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. யோகா செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் பல்வேறு முகாம்களில் இருந்தபடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சர்வதேச யோகா தினம்: யோகா பயிற்சி உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகா செய்யலாம். அதன்படி இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. யோகா செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் பல்வேறு முகாம்களில் இருந்தபடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கடும் பனி பொழியும் மலை உச்சிகளில் தொடங்கி வலிமைமிக்க கடல்கள் வரை, ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் பல்வேறு பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.
யோகா செய்வது தன்னம்பிக்கையை அதிகரித்து உடலில் மாற்றங்களை வழங்குகிறது. அதே நேரத்தில் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் திறன் யோகாசனத்திற்கு அதிகம் உள்ளது. பழங்காலம் தொட்டே நம்முடைய முன்னோர்கள் யோக பயிற்சிகளை செய்து வருகின்றனர். தற்போது மருத்துவர்களும் யோகா பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர். யோகா உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
#WATCH | Yoga onboard aircraft carrier INS Vikramaditya #InternationalYogaDay pic.twitter.com/ROBw82yvph
— ANI (@ANI) June 21, 2024
அதன்படி இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த யோகா தினத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ளவும், யோகா செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் பல்வேறு முகாம்களில் இருந்தபடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கடும் பனி பொழியும் மலை உச்சிகளில் தொடங்கி வலிமைமிக்க கடல்கள் வரை, ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | Indian Army personnel perform Yoga in icy heights on the northern frontier on #InternationalYogaDay2024
(Source: Indian Army) pic.twitter.com/7zjIBfJ0Ye
— ANI (@ANI) June 21, 2024
இந்திய அளவில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
தனுஷ்கோடி பகுதியிலும் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேசா யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
Also Read: உயர் இரத்த அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை.. அனைத்திற்கு ஒரே தீர்வாய் யோகாசனம்..!