வங்க தேச எம்.பி. கொலையில் திருப்பம்.. ஹனி ட்ராப்.. யார் அந்த பெண்?
Bangladesh MP honey trapped : சிசிடிவி காட்சிகளில், அரசியல்வாதி இரண்டு நபர்களுடன் குடியிருப்புக்குள் நுழைவதைக் காண முடிந்தது. இருவரும் பின்னர் வெளியே வருவதையும், மறுநாள் மீண்டும் பிளாட்டுக்குள் நுழைந்ததையும் பார்த்தனர், ஆனால் எம்பி மீண்டும் காணப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் எம்.பி.யின் நெருங்கிய நண்பரான அமெரிக்க குடிமகன், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு சுமார் ரூ.5 கோடி பணம் கொடுத்துள்ளதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
வங்க தேச எம்.பி. ஹனி ட்ராப் : வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனாரின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை மேற்கு வங்க சிஐடி வியாழக்கிழமை (மே 23, 2024) மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர், மேற்கு வங்கத்தில் வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் வசிப்பவர், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை சந்தித்ததாக அதிகாரி கூறியுள்ளார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிடாமல், அந்த நபர் அவரை ஏன் சந்தித்தார், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எம்.பி.யின் நெருங்கிய நண்பரான அமெரிக்க குடிமகன், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு சுமார் ரூ.5 கோடி பணம் கொடுத்துள்ளதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அவாமி லீக் எம்.பி.யின் நண்பருக்கு கொல்கத்தாவில் ஒரு பிளாட் உள்ளது, அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மேற்கொண்டு நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட வங்க தேச எம்.பி ஹனி ட்ராப்பில் சிக்கியுள்ளார். அனார் புதிய டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணால் ஈர்க்கப்பட்டுள்ளார். அங்கு சென்ற உடனே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் குடியிருப்புக்குள் நுழைந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை சிஐடி ஆய்வு செய்து வருகிறது என்று அதிகாரி கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய அதிகாரி, “இது நன்கு திட்டமிடப்பட்ட கொலை. குற்றத்தை நிறைவேற்ற ஒப்பந்த கொலையாளிகளுக்கு எம்.பி.யின் பழைய நண்பர் ஒருவர் சுமார் ₹5 கோடி பணம் கொடுத்துள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
சி.சி.டி.வி காட்சிகள் குறித்து கூறுகையில், “சிசிடிவி காட்சிகளில், அரசியல்வாதி இரண்டு நபர்களுடன் குடியிருப்புக்குள் நுழைவதைக் காண முடிந்தது. இருவரும் பின்னர் வெளியே வருவதையும், மறுநாள் மீண்டும் பிளாட்டுக்குள் நுழைந்ததையும் பார்த்தனர், ஆனால் எம்பி மீண்டும் காணப்படவில்லை” என்றார்.
கொலை
வழக்கை விசாரித்து வரும் மாநில சிஐடி, நியூ டவுன் குடியிருப்பில் இரத்தக் கறைகளைக் கண்டறிந்துள்ளதுடன், உடல் உறுப்புகளை கொட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல பிளாஸ்டிக் பைகளையும் மீட்டுள்ளது. எம்.பி முதலில் கழுத்தை நெரித்து பின்னர் அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளார்.அனாரைக் கொன்ற பிறகு, கொலையாளிகள் உடலை சிதைத்து, எலும்புகளிலிருந்து சதையைப் பிரித்து, சிதைவதைத் தாமதப்படுத்த மஞ்சள் தூளுடன் கலந்துள்ளனர்.
சில பாகங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில பாகங்களை அங்கும் இங்கும் வீசியுள்ளனர். மேலும் அவரது மொபைல் போனில் இருந்து உறவினர்களுக்கு “டெல்லி செல்வதால் தொடர்பு கொள்ள வேண்டாம்” என மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த பேசிய அதிகாரி, “ம்.பி.யின் மொபைல் போனில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை குழப்பி அவரை தேடுவதை தடுக்கும் வகையில் இந்த செய்திகள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.. அவர் கொலை செய்யப்பட்ட பிறகு இந்த செய்திகள் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
வங்கதேச எம்.பி. சிகிச்சை பெறுவதற்காக மே 12ஆம் தேதி மேற்கு வங்கம் வந்துளளார். இந்த நிலையில் அவர் மே 18ஆம் தேதி மாயமானார். இது குறித்து புகார் அளித்த பிஸ்வாஸ், மே 17ஆம் தேதி வெளியே சென்ற எம்.பி.யை காணவில்லை என ஒரு நாள் கழித்து புகார் அளித்துள்ளார். பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், ஹனி ட்ராப்பில் தொடர்புடைய பெண்ணையும் போலீசார் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க : வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை? பரபர பின்னணி!