Isro: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ.. எப்போது? பயன்பாடுகள் என்ன? முழு விவரம்..
SSLV என்பது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்ட மூன்று-நிலை, குறைந்த விலை ஏவுகணை வாகனமாகும். SSLV-D1 மற்றும் SSLV-D2 பயணங்கள் முறையே ஆகஸ்ட் 2022 மற்றும் பிப்ரவரி 2023 இல் EOS-02 மற்றும் EOS-07 ஆகிய இரண்டு EO செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8 (EOS-8) ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி மூலம் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. மைக்ரோசாட்லைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை iந்த செயற்கைக்கோளின் முதன்மையான பணியாக இருக்கும்.
175.5 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு முதல் பேரிடர் மேலாண்மை வரை பல்வேறு களங்களில் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். இந்த விண்கலம், 475 கி.மீ உயரத்தில், ஒரு வட்டமான லோ எர்த் ஆர்பிட்டில், சுமார் ஒரு வருட காலம் செயல்பாட்டில் இருக்கும்.
SSLV என்பது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்ட மூன்று-நிலை, குறைந்த விலை ஏவுகணை வாகனமாகும். SSLV-D1 மற்றும் SSLV-D2 பயணங்கள் முறையே ஆகஸ்ட் 2022 மற்றும் பிப்ரவரி 2023 இல் EOS-02 மற்றும் EOS-07 ஆகிய இரண்டு EO செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.. கையும் களவுமாக சிக்கிய ஊழியர்!
EOS-08 மூன்று பேலோடுகளைக் கொண்டுள்ளது. எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் SiC UV டோசிமீட்டர் ஆகியவை அடங்கும். EOIR பேலோட், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களைப் பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
GNSS-R பேலோட், கடல் மேற்பரப்பு காற்று பகுப்பாய்வு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, இமயமலைப் பகுதியில் உள்ள கிரையோஸ்பியர் ஆய்வுகள், வெள்ளத்தைக் கண்டறிதல் மற்றும் உள்நாட்டு நீர்நிலை கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயன்படுகிறது.
மேலும் படிக்க: ஒரு நாள் போட்டியில் பதிவாகாத சதம்.. 38 ஆண்டுகாலத்தில் முதல்முறை.. இந்திய அணி மோசமான சாதனை!
SiC UV டோசிமீட்டர் ககன்யான் மிஷனில் உள்ள க்ரூ மாட்யூலின் வியூபோர்ட்டில் UV கதிர்வீச்சைக் கண்காணிக்கிறது மற்றும் காமா கதிர்வீச்சுக்கான அதிக அளவு அலாரம் சென்சாராக செயல்படுகிறது. இந்த விண்கலம் ஒரு வருட பணி வாழ்க்கை கொண்டது.