5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“பெருமாள் பெயரில் அரசியல் நடக்குது” திருப்பதி லட்டு குறித்து ஜெகன் மோகன் காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல் என்று ஜெகன் மோகன் ரெட்டி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

“பெருமாள் பெயரில் அரசியல் நடக்குது” திருப்பதி லட்டு குறித்து ஜெகன் மோகன் காட்டம்!
ஜெகன் மோகன் ரெட்டி (photo credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Sep 2024 17:11 PM

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல் என்று ஜெகன் மோகன் ரெட்டி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். லட்டு விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் டெண்டர் செயல்முறை நிகழ்கிறது. டெண்டர் யாருக்கு விட வேண்டும், விடக் கூடாது என்ற தகுதி அளவுகோல் பல ஆண்டுகளாக மாறவில்லை.

“பெருமாள் பெயரில் அரசியல் நடக்குது”

NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் நெய்யிலிருந்து மாதிரிகளை சேகரிக்கிறது. மேலும் சான்றிதழை பெற்ற பொருட்களை வைத்து மட்டுமே லட்டு தயாரிக்கப்படுகிறது. 18 முறை எங்கள் ஆட்சியில் உள்ள பொருட்களை நாங்கள் நிராகரித்து விட்மோம். தெலுங்கு தேசம் கடவுள் பெயரில் அரசியல் செய்கிறது.

Also Read: கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!

ஆந்திராவில் சட்ட ஒழுங்குப் பிரச்னையை திசை திருப்பவை லட்டு விவகாரத்தை கிளப்பி உள்ளனர். சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியலை நடத்தி வருகிறார். சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான மக்ககள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சந்திரபாபு நாயுடுவின் அரசு தோல்வி அடைந்துவிட்டது. தன்னுடைய அரசின் தோல்வி தொடர்பான கவனத்தை மக்களிடம் இருந்து திசை திருப்பவே சந்திரபாபு நாயுடு லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

தேவஸ்தானம் கூறுவது என்ன?

முன்னதாக இதுகுறித்து திருமலை கோவிலின் முன்னாள் அர்ச்சகர் ரமண தீக்ஷிதுலு கூறுகையில், “பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்ததுடன், தரமில்லாமல் இருந்தது. இதை பல ஆண்டுகளுக்கு முன்பே கவனித்தேன். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை தலைவரிடம் முன் வைத்தோம்.

கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்ட புண்ணிய கோவிலில், தற்போது அரசு பால்பண்ணைகளில் இருந்து பசு நெய்யை கொண்டு, சுத்தமான நெய்யில் உணவுப் பொருட்களை தயாரித்து வருகின்றனர்.  ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக லட்டுவில் கலப்படம் செய்யப்படுகிறது. இது வெங்கடேசப் பெருமாளுக்கு கலப்படம் செய்த பிரசாதம் தருவது பாவம். இது மிகவும் துரதிர்ஷடவசமானது” என்று கூறினார்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் கூறுகையில், “நெய்யை ஆய்வு செய்ய எங்களிடம் லேப் இல்லை என்பதை பயன்படுத்தி தரமற்ற நெய்யை சப்ளை செய்துள்ளனர். லட்டுவின் தரம், நெய்யை ஆய்வு செய்ய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டதை அடுத்து, மாதிரிகளை சோதனை செய்ததில அவர்கள் தரமற்ற நெய் விநியோகம் செய்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் சப்ளை செய்த நெய்யில் மாட்டு கொழுப்பு, பாமாயில் உள்ளிட்டவை இருந்துள்ளது. இதனால் நெய் விநியோகம் செய்பவர்களை எச்சரித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு சர்ச்சை:

திருப்பதி எழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீண் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்புயுள்ளது. ஆளும் கட்சி குற்றச்சாட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மறுத்தே வருகின்றனர். குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆய்வகத்தின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

Also Read: “மாட்டு கொழுப்பு..” லட்டு விற்பனை மூலம் திருப்பதி கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?

ஆய்வக அறிக்கையின்படி, சோயாபீன், சூரியகாந்தி, ஆலிவ், கோதுமை பீன்ஸ், சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு, பாமாயில் மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவையும் பக்தர்களுக்கு தரப்படும் திருப்பதி லட்டுவில் சேர்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Latest News