ஆந்திராவில் வெடிக்கும் பஞ்சாயத்து.. இடிக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம்!

விதியை மீறி கட்டப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கட்சி அலுவலகம் கடந்த சனிக்கிழமை அன்று இடிக்கப்பட்டது. இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, "சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் நோக்கத்துடன் அரசியல் செய்யும் சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட ரெட்டி, "புதிதாக கட்டப்பட்டு வரும் கட்சி அலுவலகம், முடிவு பெறும் நிலையில் அதை புல்டோசர்களை கொண்டு இடிப்பது சர்வாதிகாரத்தின் வெளிபாடு" என்று பதிவிட்டார்.

ஆந்திராவில் வெடிக்கும் பஞ்சாயத்து.. இடிக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம்!

இடிக்கப்பட்ட கட்டடம்

Updated On: 

18 Nov 2024 18:56 PM

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் : நடந்து முடிந்த ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. ஆந்திராவின் அடுத்த முதல்வராக தெலுங்கு தேச கட்சியின் சந்திரபாபு நாயுடு தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் விதியை மீறி கட்டப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கட்சி அலுவலகம் கடந்த சனிக்கிழமை அன்று இடிக்கப்பட்டது. இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, “சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் நோக்கத்துடன் அரசியல் செய்யும் சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட ரெட்டி, “புதிதாக கட்டப்பட்டு வரும் கட்சி அலுவலகம், முடிவு பெறும் நிலையில் அதை புல்டோசர்களை கொண்டு இடிப்பது சர்வாதிகாரத்தின் வெளிபாடு” என்று பதிவிட்டார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், “நீதிமன்றம் கட்டிடத்தை இடிக்க தடைவிதித்த போதிலும், தடையை மீறி கட்டப்பட்டு வந்த அலுவகத்தை இடித்து நீதிமன்றத்தை அவமதித்ததுள்ளது. இந்த ஆட்சியில் சட்டமும் நீதியும் முற்றிலுமாக மறைந்து விட்டதாக குற்றம் சாட்டியது. மேலும் பழி வாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் ஒருபோதும் பயப்படாது என்றும் அக்கட்சி தலைவர் ரெட்டி தெரிவித்தார்.

இது குறித்து தெலுங்கு தேச கட்சியின் தலைவர் பட்டாபி ராம் பேசுகையில், “இடிக்கப்பட்ட கட்டிடம் எந்த முறையான அனுமதியும் பெறாமல் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவதால் தான் இடிக்கப்பட்டது. இதில் எந்தவித அரசியல் பழிவாங்கும் நோக்கமும் இல்லை” என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேச கட்சியும் சந்திரபாபு நாயுடுவும் ஒருபோது பழிவாங்கும் அரசியலை பின்பற்றுவதில்லை” என அவர் தெரிவித்தார்.

Also Read : பிரியங்காவுடன் கைக்கோர்க்கும் மம்தா.. வயநாட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி!

விசாகப்பட்டினத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் ரெட்டி வீடு கட்டியதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் புதியதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆந்திராவில் 21 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து, ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு  பதவியேற்றார்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?