சிறப்பு அந்தஸ்து விவகாரம்.. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கைகலப்பு.. டென்ஷனான பாஜக எம்.எல்.ஏக்கள்!
சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 2வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கொண்டு வரக் கோரிய தீர்மானத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை சட்டப்பேரவை கூடிய நிலையில், அவாமி இத்திஹாத் கட்சி எம்.எல்.ஏ குர்ஷித் அகமது கேஷ் பதாகை ஒன்று உயர்த்தி காண்பித்ததை அடுத்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 2வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கொண்டு வரக் கோரிய தீர்மானத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை சட்டப்பேரவை கூடிய நிலையில், அவாமி இத்திஹாத் கட்சி எம்.எல்.ஏ குர்ஷித் அகமது கேஷ் பதாகை ஒன்று உயர்த்தி காண்பித்தார். அதில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து எல்எல்ஏ குர்ஷித் அகமது கேஷ் பேனரை காட்டினார். இதைக் கண்டதும் பாஜக எம்.எல்.ஏகள் ஓடிவந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிறப்பு அந்தஸ்து விவகாரம்
இதனால் இருதரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. மேலும் குர்ஷித் அகமது கேஷ்கை எம்.எல்.ஏக்கள் தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனை தடுக்க காவல்துறை ஈடுபட்டனர். இதனை அடுத்து, அமளில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக வெளியேற்றினர்.
#WATCH | Srinagar: Ruckus and heated exchange of words ensued at J&K Assembly after Engineer Rashid’s brother & Awami Ittehad Party MLA Khurshid Ahmad Sheikh displayed a banner on the restoration of Article 370. BJP MLAs objected to the banner display.
(Earlier visuals) pic.twitter.com/VQ9nD7pHTy
— ANI (@ANI) November 7, 2024
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கடந்த செப்டம்பர், அக்டோபரில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. ஒமர் அப்துல்லா முதல்வரானார். இதையடுத்து, 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் பேரவை நேற்று கூடியது.
கூட்டத்தொடரின் தொடக்க நாள் அமர்வில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த நிர்வாகி அப்துல் ரஹீம்ராதெர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Also Read : விபத்தில் சிக்கிய இந்திய போர் விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய விமானிகள்.. திக்திக் வீடியோ!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கைகலப்பு
ஜம்மு காஷ்மீர் மக்களின் அடையாளம், கலாசாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும அரசமைப்புச்சட்ட உத்தரவாதங்களின் முக்கியத்துவத்தை இந்த சட்டப்பேரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
தீர்மானம் மீது உறையாற்றிய முதல்வர் ஒமர் அப்துல்லா, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. பேரவை அதன் கடமையை செய்துள்ளது என்றார். தீர்மானத்திற்கு காங்கிரஸ் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
எதிர்க்கட்சி தலைவர் சுனில் ஷர்மா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தனர். மேலும், அவர்கள் கூறுகையில், “கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கிறோம். நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்திலேயே இவ்விவகாரத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது” என்றனர்.
மேலும், தீர்மானத்தின் நகலை கிழித்தெறிந்து பாஜகு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர். பெரும் கூச்சலுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்படியான சூழலில், இன்றும் சட்டப்பேரவை கூடியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை சட்டப்பேரவை கூடிய நிலையில், அவாமி இத்திஹாத் கட்சி எம்.எல்.ஏ குர்ஷித் அகமது கேஷ் பதாகை ஒன்று உயர்த்தி காண்பித்தார். அதில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து எல்எல்ஏ குர்ஷித் அகமது கேஷ் பேனரை காட்டினார்.
Also Read : கூட்டணியில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவுடன் மோதும் பவன் கல்யாண்? பின்னணியில் பாஜக!
இதைக் கண்டதும் பாஜக எம்.எல்.ஏகள் ஓடிவந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.