Gulmarg Terrorist Attack: மீண்டும் பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 6 வீரர்கள் காயம்! - Tamil News | jammu kashmir barakmulla Terrorist attack on Army vehicle soldiers injured | TV9 Tamil

Gulmarg Terrorist Attack: மீண்டும் பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 6 வீரர்கள் காயம்!

Jammu Kashmir Terrorist Attack: காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குல்மார்க் அருகே ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளளது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Gulmarg Terrorist Attack: மீண்டும் பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 6 வீரர்கள் காயம்!

மாதிரிப்படம் (picture credit: PTI)

Updated On: 

24 Oct 2024 21:29 PM

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குல்மார்க் அருகே ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளளது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகளை ஒழிக்க அப்பகுதி சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இன்று காலை ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஒரு தொழிலாளிளை பயங்கரவாதிகள் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.

ராணுவ வீரர்கள் காயம்:

காயமடைந்த நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரீதம் சிங் என அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் கந்தர்பாலில் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். எனவே, அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்:

10ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணியின் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. காஷ்மீர் காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சி கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றார்.

Also Read: கொந்தளிக்கும் கடல்.. தீவிரமான டானா புயல்.. உஷார் நிலையில் இருமாநிலங்கள்!

இந்த புதிய அரசு பொறுப்பேற்ற 4 நாட்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. கந்தர்பால் மாவட்டததின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை  அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அருகே தற்காலிக குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி இரவு திடீரென நுழைந்த பயங்கரவாதிகள்,  துப்பாக்கியால் அவர்கள் மீது சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் காஷ்மீர் புத்காமில் வசித்த டாக்டர் ஷாநவாஸ், பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்த குர்மீத் சிங், முகமது ஹனீப், பீகாரைச் சேர்ந்த ஃபஹீம் நசீர், கலீம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல், அனில் குமார் சுக்லா, ஜம்முவைச் சேர்ந்த ஷஷி அப்ரோல் என்று அடையாளம் காணப்பட்டது.

டெல்லி சென்ற உமர் அப்துல்லா:

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழலை நிலவியது. புதிய அரசு பதவியேற்று 4 நாட்களில் இந்த தாக்குதல் நடந்தது. இப்படியான சூழலில், இன்று மீண்டும் ஒரு தொழிலாளி தாக்கப்பட்டது பெரும் பதற்றத்தை கிளப்பியது. மேலும், இன்று மாலை குல்மார்க் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

Also Read: ஒரே நேரத்தில் 4 மனைவிகள்.. முஸ்லீம்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யலாமா? நீதிமன்றம் பரபர தீர்ப்பு

முதல்வர் உமர் அப்துல்லா பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லி சென்றிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை, ராணுவம், பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த தாக்குதல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், ”வடக்கு காஷ்மீரின் பூட்டா பத்ரி பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரர்கள் காயம் அடைந்தது துரதிருஷ்டவசமான செய்தி. காஷ்மீரில் சமீபகாலமாக தொடர் தாக்குதல்கள் நடந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தத் தாக்குதலை நான் கண்டிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  முதல்வர் உமர் அப்துல்லா, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லி சென்றிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த சந்திப்பில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!