5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஜம்மு காஷ்மீர் வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. தொடரும் பதற்றம்..

ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கில் இருந்து ராணுவ பழைய பொருட்களை வாங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பழைய பொருடகளை லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருக்கும் போது இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 4 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. தொடரும் பதற்றம்..
மாதிரி புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 29 Jul 2024 19:17 PM

ஜம்மு காஷ்மீர் வெடி விபத்து: வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி,ஷேர் காலனி சோபோரில் பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது மர்மமான பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் கடை வியாபாரியும் அடங்குவார். அவர் லடாக்கில் இருந்து ராணுவ பழைய பொருட்களை வாங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பழைய பொருடகளை லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருக்கும் போது இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 4 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ” பாஜகவின் சக்கரவியூகம்.. அபிமன்யுவுக்கு நடந்தது, இன்று இந்தியாவுக்கு நடக்கிறது” – மக்களவையில் ராகுல் காந்தி

இறந்தவர்கள் நசீர் அகமது நட்ரூ (40), ஆசிம் அஷ்ரப் மிர் (20), ஆதில் ரஷித் பட் (23) மற்றும் முகமது அசார் (25) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஷேர் காலனியில் வசிப்பவர்கள்.குண்டு வெடிப்புக்கான சரியான காரணம் மற்றும் நோக்கம் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து எஸ்எஸ்பி சோபூர், திவ்யா டி கூறுகையில், “இந்த சம்பவம் (மர்மமான வெடிப்பு) ஷேர் காலனி சோபோரில் நடந்தது. இறந்தவர்கள் நசீர் அகமது நட்ரூ, ஆசம் அஷ்ரப் மிர், முகமது அசார் மற்றும் அடில் ரஷித் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்கிராப் டீலர்கள் இன்று லடாக்கில் இருந்து சில பழைய இரும்பு பொருட்களை கொண்டு வந்து இறக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் எஃப்எஸ்எல் குழு இங்கு வரும். -மருத்துவமனையில் உடல்களின் சட்டப்பூர்வ சம்பிரதாயப் பணிகள் நடந்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டம்..

Latest News