J&K Terror Attack: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்.. - Tamil News | | TV9 Tamil

J&K Terror Attack: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..

கத்துவாவில் இருந்து 150 கிமீ தொலைவில் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்ட வாகனம் மீது பயங்கரவாதிகள் தக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அவர்கள் கையில் இருந்த குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்திய போதும் பயங்கரவாதிகள் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

J&K Terror Attack: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..

மாதிரி புகைப்படம்

Published: 

09 Jul 2024 08:38 AM

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேடி பகுதியில் நேற்று மதியம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கத்துவாவில் இருந்து 150 கிமீ தொலைவில் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்ட வாகனம் மீது பயங்கரவாதிகள் தக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அவர்கள் கையில் இருந்த குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்திய போதும் பயங்கரவாதிகள் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரு தரப்பினர் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்த போதும் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை தேடும் பணியில் தற்போது ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதலுதவி சிகிச்சை முடிந்து பதான்கோட் மருத்துவமனைக்கு வீரர்கள் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

Also Read: லட்சியத்தை அடைவதற்கு ஏழ்மையை ஒரு தடையாக கருதக் கூடாது – நடராஜன்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் நடக்கும் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். ஞாயிற்றுகிழமை ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. சனிக்கிழமை தொடங்கிய இந்த என்கவுன்டர்களில் ஒரு துணை ராணுவ வீரர் உட்பட இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர், மற்றொரு சிப்பாய் காயம் அடைந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிஆர்பிஎஃப் / மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது முதல் என்கவுன்டர் மோடர்காம் கிராமத்தில் நடந்தது. ஆரம்ப துப்பாக்கிச் சூட்டில், துணை ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அதே நேரத்தில், குல்காமின் ஃப்ரிசல் பகுதியில் மற்றொரு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு 4 பயங்கரவாதிகளின் உடல்கள் ட்ரோன் காட்சிகள் மூலம் தெரியவந்தது. இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

Also Read: பான் கார்டு உஷார்… அதிகரிக்கும் மோசடிகள்… திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!