5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jammu Kashmir Election: ஜம்மு காஷ்மீரில் புதுச்சேரி ஃபார்முலா.. ஆட்சியை பிடிக்க மாஸ்டர் பிளான்!

&K Election Result 2024: ஜம்மு காஷ்மீரில் ஐந்து எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Jammu Kashmir Election: ஜம்மு காஷ்மீரில் புதுச்சேரி ஃபார்முலா..  ஆட்சியை பிடிக்க மாஸ்டர் பிளான்!
ஜம்மு காஷ்மீர் தேர்தல் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Oct 2024 17:47 PM

ஜம்மு காஷ்மீரில் ஐந்து எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு தொங்கு பேரவை ஏற்படும் சூழலில் ஆட்சி அமைப்பதில் இந்த உறுப்பினர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், துணை நிலை ஆளுநருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கட்டமும், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்டமும், அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடந்தது.

இங்கு மொத்த வாக்காளர்கள் 88 லட்சம் பேர் இருக்கும் நிலையில், மூன்று கட்டங்களிலும் சேர்த்து 64.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கைக்காக 20 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read: ஜம்மு காஷ்மீரில் வெற்றி யாருக்கு? – வாக்கு எண்ணிக்கை நிலவரம் உடனுக்குடன்!

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. இதில் 1,130 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீர் எதிர்கொண்ட கடைசி தேர்தல் இதுவாகும்.

ஆளுநருக்கு கிடைத்த அதிகாரம்

இதன்பிறகு 2019ஆம் ஆண்டு  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேகங்களாக மாற்றியது. எனவே, 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் என்பதே கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு தொங்கு பேரவை ஏற்படும் சூழலில் ஆட்சி அமைப்பதில் இந்த உறுப்பினர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஐந்து உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டால் சட்டசபை பலம் 95 உறுப்பினர்களாக விரிவடையும். மேலும், பெரும்பான்மை 46ல் இருந்து 48 ஆகவும் அதிகரிக்கப்படும். இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் புதுச்சேரி ஃபார்முலா:

2018 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தபோது பிரச்சினை எழுந்தது. இது நீதிமன்றம் வரை சென்றது. எம்ஏல்ஏக்கள் நியமனம் யூனியன் பிரதேசத்தின் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதற்கு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு நியமித்த எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1963 யூனியன் பிரதேச சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்யும் போது, ​​யூனியன் பிரதேச அரசை கலந்தாலோசிக்க மத்திய அரசுக்கு கட்டாயமில்லை உச்ச நீதிமன்றம் கூறியது.

Also Read: பாஜக vs காங்கிரஸ்.. ஹரியானா வாக்கு எண்ணிக்கை அப்டேட் உடனுக்குடன்!

நியமன எம்எல்ஏக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை எனவும், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மற்றும் பட்ஜெட் போன்ற முக்கியமான முடிவுகள் உட்பட அனைத்து விஷயங்களிலும் சமமான உரிமை அவர்களுக்கு உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

Latest News